மன தைரியம் இருந்தால் வெற்றி நம்மை நேசிக்கும்!

Success will love us if we have courage!
Mental courage
Published on

ன தைரியம் என்பது நம் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்று. எந்த காரியமாக இருந்தாலும் சரி அதை மனதைரித்யதோடு செய்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். அதில் கொஞ்சம் சரிவு இருந்தால் கூட நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது நம்மை தோல்விகள் துரத்தும். 

வெற்றியின் பின்னால் நாம் ஓட வேண்டும் என்றால் வெற்றி நம்மை நேசிக்க வேண்டும் என்றால் நிச்சயமாக மன தைரியம் வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு சிறு சம்பவம் இப்பதிவில். 

நாம் ஆரம்பிக்கும் தொழிலோ, சோதனையோ எதிர்பார்க்கும் வெற்றியைத்தரும் நேரத்தில் திடீரென ஒரு அழிவைச் சந்திக்க நேரிடலாம். உதாரணமாக தீ விபத்தோ, வெள்ள அழிவோ, திருடர்களாலோ ஏற்படலாம். அப்போது நாம் இடிந்து உட்கார்ந்துவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுவோம். இதுவும் ஒரு நன்மைக்கே என்று நினைத்தால் நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்.

தாமஸ் ஆல்வா எடிசன் எண்ணற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர். ஒருநாள் இரவு எதிர்பாராத விதமாக அவரின் விஞ்ஞான ஆய்வுக்கூடம் தீ விபத்துக்குள்ளானது. கருவிகள், ஆய்வு ஏடுகள் உட்பட அனைத்தும் ஒட்டுமொத்தமாக எரிந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்த எடிசனின் மகன், 'இந்தக் காட்சிகளைத் தந்தை பார்த்தால் உடல்நலம் பாதிக்கப்படும்' என்று மிகவும் துயரப்பட்டார். ஒரு விஞ்ஞானியின் பல ஆண்டுகள் உழைப்பும் ஒரே இரவில் நாசமாகிக் கொண்டிருக்கிறதே என்று கவலைப்பட்டார். உடனே அங்கு வந்த எடிசன் அதைப் பார்த்து அதிர்ந்துவிடவில்லை. "ஓடு.. உன் தாயைக் கூப்பிட்டு வா... இத்தனை பெரிய தீயை அவள் இதற்கு முன் பார்த்திருக்கமாட்டாள்" என்று மகனிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்:
மாற்றி யோசிப்போம்… நிச்சயம் மாற்றம் வரும்!
Success will love us if we have courage!

மறுநாள் தீயில் எரிந்து நாசமான பொருட்களின் குவியலுக்கிடையே எடிசன் நடந்து சென்றார். தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த உதவியாளரிடம் எடிசன் என்ன சொன்னார் தெரியுமா? "நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நம்முடைய தவறுகளும் தோல்விகளும் உலகின் கண்ணில்படாமல் ஒரேயடியாய் மறைத்துவிட்டார். போகட்டும். நாம் எல்லாவற்றையும் முதலில் இருந்தே மீண்டும் தொடங்குவோம்'' என்றார். சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மனோதிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுகின்ற தன்மை எத்தனை பேரிடம் இருக்கும்.

ஒரு வெற்றி வாய்ப்பை எதிர்பார்க்கும்போது முயற்சி, காலம், பொருள், இவைகளை திடீரென இழந்துவிட்டால் மன தைரியத்தை மட்டும் விடக்கூடாது. மேலும் மனோதிடத்துடன் வெற்றியை நோக்கி நடைபோட வேண்டும் என்ற கருத்தையே இது வலியுறுத்துகிறது. மனதைரியம் மட்டும் நமக்கு திடமாக இருந்தால் என்றைக்குமே வெற்றி நம்மை நேசிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com