புதுமையான முயற்சியால் வெற்றி உங்கள் பின்னால் ஓடிவரும்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

ந்த ஒரு செயல்பாட்டிற்கும் முயற்சி என்பது மிக முக்கியமானது ஆனால் நாம் முயற்சி செய்யும்போது ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நாம் திரும்பத் திரும்ப ஒரே பாணியில் ஒரே மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டால் அது நமக்கு பலனை தராது. ஆனால் நமக்கு பலன் தரவேண்டும் என்றால் முயற்சிகளில் நிச்சயம் ஒரு புதுமை வேண்டும்.

எப்பொழுதுமே புதுமையாக வித்தியாசமாக ஒரு முயற்சி செய்தால் அது ஆரம்பத்தில் இது சரி வருமா இது தோல்வியில் முடியுமா வெற்றியில் முடியுமா என பலதர குழப்பங்கள் இருக்கும். ஆனால் புதுமையான முயற்சிக்கு என்றுமே நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என உறுதியாய் நம்பி புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டால் நிச்சயமாக நாம் நம் இலக்கை அடையலாம். எல்லோரும்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்களிலிருந்து உங்களை மட்டும் தனித்துக் காட்டுவது எது. அப்படிப்பட்ட சிந்தனை உங்களுக்கு வந்து விட்டாலே போதும். அந்த இடம்தான் நீங்கள் வெல்லப்போகும் முதல் அறிகுறி ஆகும்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பார்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். எந்த ஒரு செயலையும் எல்லோரையும் போல ஒரே மாதிரி செய்யாமல் புதிதாக வேற மாதிரி செய்யுங்கள். உதாரணமாக பழைய துணிகளைக் கூட புது டிசைனாக மாற்றி அணிந்துக் கொள்ளலாம். இதற்குப் பெரிய செலவு ஒன்றும் ஆகாது.

காய்கறிகளை வாங்குவதற்கு ப்ளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தாமல் காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். அதுபோல உங்கள் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலைகளில் கூட புதுமைகளைப் புகுத்தலாம். தினமும் காலையில் புதுசா எதாவது யோசிங்க. காலையில் வாங்கும் செய்தித்தாள் முதல் இரவு படுக்கும் வரை நீங்கள் செய்யும் செலவுகளைச் சிக்கனப்படுத்துங்கள்.

இரவு தூங்குவதற்கு முன் ஒரு பத்து நிமிடம் ஒதுக்குங்கள் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து இன்று நீங்கள் செய்த நல்லது எது? நீங்கள் செய்த தவறு எது? இரண்டையும் எழுதவும் அதில் நீங்கள் செய்திருப்பது நல்லது அதிகம் இருந்தால் தவறு குறைவாக இருந்தால் அதை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தவறு அதிகமாக இருந்து நல்லது குறைவாக இருந்தால் மறுநாள் நாளை நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று சபதம் ஏற்று இரவு தூங்க செல்லுங்கள் மறுநாள் காலை உங்கள் மனநிலையும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுருளிமலை சுருளி ஆண்டவர் பற்றி தெரியுமா?
Motivation image

எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. ஆனால் வித்தியாசமான தீர்வை யோசிப்பவன்தான் வாழ்வில் வெற்றி அடைகிறேன். அதனால் உங்கள் செயல்களில் புதுமைகளைப் புகுத்துங்கள். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள். கொஞ்சம் மாத்தி யோசிங்க வெற்றி உங்கள் வசம்தான்.

இனியாவது உங்கள் முயற்சிகளில் ஒரு புதுமை இருக்கட்டும் புதுமையோடு மட்டுமல்லாமல் ஒரு தனித்துவமும் வித்தியாசமும் இருக்கட்டும். இப்படி முயற்சித்துப் பாருங்களேன் உங்கள் பின்னால் வெற்றி ஓடிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com