
தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும்வரை நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல்செயல்கள் விளையும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).
சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவைப் போல் மென்மையானது. தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
இதயம் சொல்வதை செய். வெற்றியோ, தோல்வியோ அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும்தான் உண்டு.
கீழ்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
பொய் சொல்லி தப்பிக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது. உண்மை சாக விடாது.
பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.
கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக்கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.