நேர்மறையாக பேசுங்கள்… தன்னம்பிக்கை தானே வரும்!

Motivation Image
Motivation Imagepixabay.com

மீபத்தில் தோழி ஒருவர் தன் பெண் சரியாக படிப்பதில்லை, டியூஷன் போட்டும் மார்க் வரவில்லை. அதனால் ஸ்கூலுக்கு போகவே பிடிக்கவில்லை என்று சொன்னதாகவும், தோழி உடனே பெண்ணின் தமிழ் ஆசிரியையிடம் (தமிழ் பிடித்த பாடம் என்பதால் அதில் எப்போதும் நல்ல மதிப்பெண் எடுப்பாளாம்) சொல்லவும், அவர் மாணவியிடம் கிட்டத்தட்ட தினம் ஒரு மணிநேரம் பேசி ஒரு மாதம் கழித்து "உங்கள் பெண்ணிற்கு இந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது. அதில் சேருங்கள், மதிப்பெண் குறையும் பாடங்கள் எது என்று கவனித்து நீங்களும் உட்கார்ந்து எதனால் குறைகிறது என்று அவளுடன் உட்கார்ந்து பேசுங்கள். எப்போதும் குறைவான மார்க் வாங்கினால் நீ எங்கே முன்னேறப் போகிறாய் என்று எதிர்மறையாக பேசுவைத் தவிருங்கள் என்று கூறினாராம்‌.‌

ஆசிரியை கூறியதை கடைப்பிடிக்க தொடங்கி தன் பெண்ணிற்கு பிடித்த டென்னிஸ் விளையாட்டில் சேர்த்து விட்டதாகவும் எதிர்மறையாக பேசுவதை தவிர்த்ததாகவும் தற்போது நிறைய நல்ல மாறுதல் இருப்பதாகவும் கூறினார்.

எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் தோல்வி அடைபவர் களுக்கு பயம் ஏற்படும். மறுபடி முயற்சி செய்ய தயக்கம் ஏற்படும். பயம் மற்றும் தயக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம் சகஜம்தான். உன்னால் முடியும் என்று சொல்லி நம்பிக்கையை வளர்க்க வேண்டும். மற்றவரை சுட்டிக்காட்டி அவர் போல் ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதை விட்டு உன் மேல் நம்பிக்கை வை. உன்னால் முடியும் என்று அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க முயற்சி செய்ய வேண்டும்..

குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் முன்பே தன்னம் பிக்கையை வளர்க்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் வளரும் குழந்தைகள் கல்வியிலும் சிறந்து விளங்கு வார்கள். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தலே முதற் கல்வி. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ட்ரெண்ட் ஆகிவரும் பெண்களுக்கான கண்கவர் ஹெட்பேண்ட்கள்!
Motivation Image

அவர்கள் தவறு செய்தால் மன்னித்து, அது தவறு இனி செய்யக் கூடாது என்பதை சுட்டிக் காட்டி புரிய வைக்க வேண்டும். பாடத்திலோ ஏதாவது போட்டியிலோ தோல்வி அடைந்தால் மறுபடி முயற்சி செய் என்று உற்சாகப்படுத்த வேண்டும். அடுத்த முயற்சியில் வெற்றி பெற முன்னே செய்த தவறுகளை தவிர்க்க உதவி செய்ய வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் கற்றுத் தருவதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கை வளரும். பெண்ணோ பையனோ கண்டிப்பாக ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். படிப்பாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு துறையாக இருக்கலாம்‌‌. அதைக் கண்டு பிடித்து ஊக்குவித்து வெற்றி பெற செய்வது பெற்றோரின் கடமை. தோல்வி வரும். அதில் வெற்றிக்கான வழி இருக்கும். முயற்சியை கைவிடாது இருக்க தன்னம்பிக்கை தேவை.

முயற்சி திருவினையாக்கும் 

முயற்சி யின்மை இன்மை புகுத்தி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com