
மனம் போல வாழ்க்கை!
எண்ணம் போலவே வாழ்க்கை
இருக்குமென்றாலும்.
எண்ணுவதும் ஏற்பதும்
யாவருக்கும் இன்னலின்று
அமையவேண்டுமல்லவா!
அளவுக்கு அதிகமானால்
அமிர்தமும் நஞ்சென
அறிந்த போதும்...
அதன் எல்லை வரை
அனுபவித்து விடவே
ஆசைப்படுகிறது மன!
உழைக்காமல் பிழைக்கின்ற
வாழ்க்கை நிலைக்காது
என்றாலும்..
உல்லாச வாழ்வுக்கே
ஏங்குகிறது மனது!
அவசியம் இல்லாத போதும்
ஆசை படுகிற அனைத்தையும்
அடைந்து அனுபவிக்க
அலைகிறது இந்த மனது!
மனம் போன போக்கில்
மனிதன் போனால்...
மானம் போகுமென்றாலும்...
மாற்றி கொள்வதில்லையே!
தண்ணீரை போலவே
சேரும் இடம் சேர்ந்து
நிறம் மாறுகிறது மனது!
சுயநலத்தில் சிக்கி
சுழன்று...
நேரம் பார்த்து,
நேர்மையை விலைபேசி
அநியாய வழியில்
பணத்தை தேடி...
மரம் விட்டு மரம் ஓடும்
குரங்கெனவே குதித்தாடும்
மனதை கொஞ்சம்
அடக்கி ஆள்வோமா?
அழகான வாழ்கையை
அவனைவருக்கும் பகிர்ந்து
ஆரோக்கியமாக
வாழ்வோமா ?!