சிறுகதை: நல்லதும் கெட்டதும்; நெஞ்சில் நிற்பதும் அழிவதும்... நட்பின் உயரிய பாடம்!

short moral story
Ramu & Somu - short motivation storyAI Image
Published on
Kalki
Kalki

ஒரு அழகிய சிற்றூரில் ராமு, சோமு ஆகிய இரு நண்பர்கள் வசித்து வந்தனர் (short moral story). ஒரு நாள் அவர்கள் இருவரும் குளத்திற்கு சென்று குளிக்கலாம் என்று திட்டமிட்டு சென்றனர். அப்போது ராமுவின் கால் சேற்றில் மாட்டியது. அதனை பார்த்த சோமு உள்ளே இறங்க முயன்றார். ஆனால் அது மிகவும் ஆழமாக இருப்பதை தெரிந்துகொண்ட சோமு, ஒரு கயிற்றைத் தூக்கி வீசினார்.

அதைப் பிடித்துக் கொண்ட ராமு, உடனடியாக யாரையாவது உதவிக்கு அழைத்து வா என கத்தினார். உடனடியாக சோமு அந்த கயிறை அருகில் இருந்த மரத்தில் கட்டி விட்டு உதவிக்கு யாரேனும் கூப்பிடச் சென்றார். அப்போது அங்கு இருந்த சில கிராமத்து வாசிகள் உதவிக்கு வந்தனர்.

வெற்றிகரமாக ராமுவை சேற்றில் இருந்து காப்பாற்றினர். அதை அங்கு இருந்த மரத்தில் கல்லால் எழுதினான் ராமு. அப்போது ஒன்றும் புரியவில்லை.

சில நாட்களுக்கு பிறகு, இருவரும் வீட்டிற்கு செல்லும் வழியில் அவர்களை ஒரு நாய் வேகமாக துரத்தியது. அப்போது சோமு பயந்து ஓடி ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்தான். ஆனால் ராமு அந்த நாயிடம் இருந்து தப்பிக்க முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தான். அதனை கண்ட சோமு சிரித்தான். ராமு மண்ணில் தனது கையால் "எனது நண்பன் நான் துன்பத்தில் இருக்கும் போது சிரித்தான்" என்று எழுதினான்.. பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றடைய ஒரு கேள்வியை கேட்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பணிப்பெண்!
short moral story

"ஏன் நான் உதவிய போது நீ மரத்திலும், பின்னர் பார்த்து சிரித்தபோது மண்ணிலும் எழுதினாய்?" என்று. அதற்கு ராமு, "நீ உதவியது எனது மனதில் எப்போதும் இருக்கும். ஆனால் நீ என்னை கேலி செய்தது ஒரு நிமிடம் மட்டும் தான் இருக்கும். அதுதான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடம்," என்று சொன்னான். பின்னர் சோமு ராமுவிடம் அவரைப் பார்த்து சிரித்ததற்கு மன்னிப்பு கேட்டான். தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூறினான்.

நம் வாழ்க்கையிலும்... நல்லதை மட்டும் வைத்துக் கொள்க! கெட்டதை மறந்து விடுக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com