

நம்மில் பலரும் பணக்காரன் ஆவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டம் என்பது லாட்டரி சீட்டிலோ, பரம்பரைச் சொத்திலோ வருவது. ஆனால் உண்மையான செல்வத்தை உருவாக்க அதிர்ஷ்டம் ஒருபோதும் தேவையில்லை என்று மிக ஆணித்தரமாகச் சொல்கிறார் நவல் ரவிகாந்த்.
THE ALMANACK OF NAVAL RAVIKANT என்ற புத்தகம் உலகம் முழுவதும் பல இளைஞர்களின் மைண்ட்செட்டை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பணத்தை ஈர்க்கும் சில அற்புதமான ரகசியங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பணத்திற்கும் செல்வத்திற்கும் உள்ள வித்தியாசம்!
முதலில் நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது நம் நேரத்தை விற்று வாங்குவது. நீங்கள் தினமும் வேலைக்குச் சென்றால் மட்டுமே அது உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் செல்வம் என்பது நாம் தூங்கும் போதும் நமக்கு வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு சிஸ்டம். ஒரு நல்ல கம்பெனியில் பங்குகளை வாங்குவது, ஒரு சாப்ட்வேர் உருவாக்குவது அல்லது ஒரு டிஜிட்டல் கண்டென்ட்டை உருவாக்குவது போன்றவை தான் உண்மையான செல்வம்.
இது 24 மணி நேரமும் நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும். நாம் எப்போதுமே நேரத்தை பணமாக மாற்றும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தால், ஒருபோதும் பெரிய அளவில் வளர முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.
நெம்புகோல் தத்துவம்!
உலகில் வேறு எவராலும் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியாத ஒரு திறமை உங்களிடம் நிச்சயம் இருக்கும். அது உங்களின் இயற்கையான ரசனையாகவோ அல்லது நீங்கள் விரும்பி செய்யும் ஒரு வேலையாகவோ இருக்கலாம். அதுதான் உங்களின் ஸ்பெசிபிக் நாலெட்ஜ். அதை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. அதோடு இன்டர்நெட், கோடிங் போன்ற நவீன நெம்புகோல்களைப் பயன்படுத்தப் பழக வேண்டும். ஒரு முறை நீங்கள் எழுதும் கோட் கோடிக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் சென்றடையும். இதற்கு யாருடைய அனுமதியும் உங்களுக்குத் தேவையில்லை.
கூட்டு வட்டி!
வாழ்க்கையில் எல்லாமே ஒரு கூட்டு வட்டி போலத்தான் செயல்படுகிறது. அது பணமாக இருந்தாலும் சரி, பழக்க வழக்கங்களாக இருந்தாலும் சரி. நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களோடு சேர்ந்து நீண்ட கால அடிப்படையில் ஒரு தொழிலையோ, உறவையோ உருவாக்கும் போது அதன் பலன் பன்மடங்காக இருக்கும்.
ஷார்ட்கட்டில் பணம் சம்பாதிக்க நினைப்பது எப்போதுமே ஆபத்தானது. நாம் செய்யும் சின்ன சின்ன நல்ல பழக்கங்கள் கூட பல வருடங்கள் கழித்து ஒரு மிகப்பெரிய பாசிட்டிவான ரிசல்ட்டைக் கொடுக்கும். பொறுமையாக இருந்து சரியான முதலீடுகளைச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பது இந்த புத்தகத்தின் மிக முக்கியமான பாடமாகும்.
அதிர்ஷ்டம், தானாக வருவது, ஆனால் செல்வம், ஒரு திறமை. நாம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது போல இதையும் கொஞ்சம் மெனக்கெட்டால் மிக சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். தினமும் உங்களை நீங்களே அப்டேட் செய்து கொண்டு, உங்களுக்கான தனித்துவமான பாதையை உருவாக்கினால் நீங்களும் சீக்கிரமே ஒரு பெரும் கோடீஸ்வரனாக மாறுவது உறுதி.
நவல் ரவிகாந்த் சொல்லும் இந்த ஆழமான தத்துவங்களை வெறும் தியரியாகப் படிக்காமல் உங்களது நிஜ வாழ்க்கையில் அப்ளை செய்து பாருங்கள்.