வெற்றியின் அடிப்படை உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி!

self-confidence
motivation articles
Published on

வெற்றி… இதைத்தேடி நாம் ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம் ஆனால், நாம் எப்படி ஓடுகிறோம் எதை நோக்கி ஓடுகிறோம் நமது இலக்கு என்ன எப்படி ஓடினால் அந்த வெற்றியை பெறலாம் என்ற பலவிதமான நுணுக்கங்கள் உள்ளன.

ஒவ்வொரு வெற்றியாளரின் பின்னாலும் அவரின் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டுப்பாருங்களேன் அப்பொழுது புரியும் அவரின் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அதைவிட எதையும் சீக்கிரம் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம்.

ஓடுதளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்து விடுகிறது. அதைப்போல நாமும் சில மாதங்களிலேயே வாழ்வில் நாம் அடைய விரும்பும் உச்சத்தை அடைந்து விடவேண்டும் என்று விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என்று நம்புகிறோம்.

அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம். அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம். ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா என்பதை நாம்தான் கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஒரு சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம்.

ஆனால் அவர்கள் அந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் உழைத்திருப்பார்கள் என்பதை நாம் எண்ண மறந்து விடுகிறோம். நாம் தூங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்தார்கள் என்ற உண்மை நமக்கு தெரிவதே இல்லை.

நமக்கென்று சில வரையறைகள் சில அகல, உயர நீளங்கள் அளவீடாக இருக்கும். அந்த அளவு மட்டுமே நமது உயர்வும் இருக்கும். அதைத்தாண்டி நம்மால் செல்லமுடியாது. சமுதாயத்தில் நமது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல் நலம் யாவும் அந்த நன்மதிப்பைப் பொருத்தே அமைகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றிப்பூக்களை பெற்றுத் தரும் 15 வெற்றிப்படிகள்!
self-confidence

வெற்றி மேலும் மேலும் வெற்றியை இழுத்துக்கொண்டு வரும். அதுபோலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியையே இழுத்துவரும்.

ஆக, நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால் அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள். அந்த வெற்றிகள் மூலம் அதிர்ஷ்டக் கதவு திறந்துகொள்ளும்.

ஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டியபின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்தவுடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ, அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலையே வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும். மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டம் கதவைத் தட்ட ஆரம்பித்து விடுகிறது.

வாழ்வில் செல்வம் வேண்டும், புகழ் வேண்டும், எல்லாம் வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதுமோ, முயற்சி வேண்டாமா? நிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால்தான் நிழல் நம் பின்னால் வரும்.

எங்கே ஊக்கமும், விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழிகேட்டுக் கொண்டு வரும். யாரிடம் விடாமுயற்சி இருக்கிறதோ, அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. விடாமுயற்சி இருக்கிற இடத்தில்தான் அதிர்ஷ்டக் கதவு திறக்கிறது.

அமைதியான மனதுடன், தெளிந்த சிந்தனையுடன், மிகுந்த நம்பிக்கையுடன், முகமலர்ச்சியுடன், அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்களே சாதனைகளாகின்றன. சில வேளைகளில் நமது செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.

வைரத்திற்கும், சாதாரண கற்களுக்கும் வேறுபாடுகளை உணர முடியாதவர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம். வைர வியாபாரியால் மட்டுமே வைரத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள முடியும். அந்த நாள் வரும்வரை நமது நிலையும் உயரும். அதுவரை உழைத்து பொறுமையாக காத்திருப்போம். அப்போது அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com