
பண்டைய கிரேக்க மருத்துவரும் “மருத்துவத்தின் தந்தை என்று போற்றபடுபவரும்தான் ஹிப்போகிரட்ஸ். மேலும் இவரே நோய்களான மூலக் காரணங்களை கண்டறிய முற்பட்ட முதல் மருத்துவராக கருதப்படுகிறார். ஒருவர் மருத்துவம் பயின்று பதவி ஏற்கும் முன் ஏற்கும் உறுதி மொழி இவரால் எழுதப்பட்டதாகும்.
இவர் வாழ்ந்த காலத்தில் கிரேக்க மக்கள் நோய்களுக்கு காரணம் கடவுளின் சாபம் என நம்பி இருந்தனர். அதை கடுமையாக எதிர்த்து நோய்க்கான காரணங்களையும், தீர்வுகளையும் மக்களுக்கு வழங்கியர். அவரது எழுத்துகளிலும், போதனைகளிலும், மருத்துவ நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களுக்கான அடிப்படைகள் அமைந்த பல பொன் மொழிகள் இடம் பெற்றுள்ளது. இவைகள் மருத்துவம் மட்டுமன்றி வாழ்வின் பல அம்சங்களில் வழிகாட்டுகின்றன.
ஹிப்போகிரட்சின் பொன்மொழிகள்:
1. ஒரு நோயாளி மருத்துவருடன் சேர்ந்து நோயை எதிர்த்து போராட வேண்டும்.
2. நீங்களே உங்கள் மருத்துவராக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு முட்டாள்.
3. உண்மையிலேயே அறிவது அறிவியல், வெறுமனே தனக்கு தெரியும் என்று நம்புவது அறியாமை.
4. இயற்கையே சிறந்த மருத்துவர்.
5. புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் தெய்வீகம் என்று அழைத்தால், தெய்வீகமான விஷயங்களுக்கு முடிவே இருக்காது.
6. மருத்துவர்கள் எந்த விதமான சேதத்தையும், அல்லது கெடுதலையும் ஏற்படுத்தாதது மிக முக்கியம்.
7. வாழ்க்கை குறுகியது, கலை நீண்டது. வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அனுபவம் மோசமானது, தீர்மானம் கடினமானது.
8. ஒரு மனிதருக்கு என்ன நோய் உள்ளது என்பதைவிட, அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை அறிவது முக்கியம்.
9. சில சமயம் குணப்படுத்துங்கள் அடிக்கடி சிகிச்சை அளிக்கவும், எப்போதும் ஆறுதல் அளியுங்கள்.
10. மருத்துவக்கலை எங்கு நேசிக்கப்படுகிறது, அங்கு மனிதநேயம் காணப்படுகிறது.
11. சில நேரங்களில் எதையும் செய்யாமல் இருத்தல் ஒரு நல்ல மருத்துவமாகும்.
12. கடுமையான நோய்களுக்கு கடுமையான மருத்துவங்கள் மிகவும் பொருத்தமாகும்.
13. ஒரு புத்திசாலி, மனிதனின் ஆரோக்கியமே மிக உயர்ந்த வரப்பிரசாதம் என்று கருதவேண்டும்.
14. முன்னோர்களால் அடையப்பெற்ற அறிவை இகழும் மருத்துவர் ஒரு முட்டாள்.
15. வயதானவர்களுக்கு இளைஞர்களை விட குறைவான நோய்களே உள்ளன, ஆனால் அவர்களின் நோய்கள் ஒருபோதும் அவர்களை விட்டு விலகுவதில்லை.
16. புனிதமான விஷயங்கள் புனிதமான மனிதர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன.
17. பயன்படுத்தப்படுவது வளர்ச்சியடைகிறது. பயன்படுத்தப்படாதது வீணாகிறது.
18. ஞானத்தை விரும்பும் ஒரு மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர்.
19. தூக்கம் மற்றும் தூக்கமின்மை இரண்டும், அளவுக்கு அதிகமாகும் போது கேடு விளைவிக்கும்.
20. இந்த இரண்டு விஷயங்களை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்: மற்றவர்களுக்கு உதவுவது அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் இருப்பது.
21. ஒரு மனிதனின் சிறந்த மருந்து நடைப்பயிற்சி ஆகும்.