கூட்டமா இருந்தா எவனும் உதவி செய்ய மாட்டான்! 

The Bystander Effect
The Bystander Effect
Published on

ஒரு கூட்டத்துக்கு மத்தியில ஒருத்தன் மிகப்பெரிய ஆபத்துல இருக்கான். ஆனா, அவனுக்கு யாருமே உதவ மாட்றாங்க. ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால மிகப் பெரிய Psychological விளைவு ஒன்னு இருக்கு. அதுதான், The Bystander Effect…

இந்த Psychological Phenomenon என்ன சொல்லுதுன்னா, மக்கள் கூட்டமா இருக்குற இடத்துல ஒரு நபர் பாதிக்கப்படும்போது அவருக்கு உதவி செய்ய யாருமே முன்வர மாட்டாங்கலாம். ஏன்னா, “அதான் அங்க நிறைய பேர் இருக்காங்களே. பாதிக்கப்பட்டவருக்கு வேற யாராவது உதவி பண்ணுவாங்கன்னு” எல்லாருமே நினைப்பாங்களாம். 

1964-இல் Kitty Genovese எனகிற பெண்மணி பல பேருக்கு மத்தியில வச்சு கொலை செய்யப்படறாங்க. அந்தப் பெண்ணோட அலறல் சத்தம் கேட்டும் சுத்தி இருந்த யாருமே அவங்களுக்கு உதவி செய்ய முன்வரல. இந்த நிகழ்வுக்குப் பிறகு மக்கள் ஏன் இப்படி இருக்காங்கன்னு ஆய்வு செஞ்சு பார்க்கும்போதுதான், இதுக்கு பின்னாடி Bystander விளைவு அப்படின்னு ஒன்னு இருக்குன்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்:
ஆபத்து! பூமி தனது அச்சிலிருந்து கிழக்கு நோக்கி சாய்ந்துள்ளது; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!
The Bystander Effect

நீங்களும் எந்த ஒரு Situation-அ Face பண்ணி இருப்பீங்க. யாரோ ஒருத்தர் ஆபத்துல இருக்கும்போது உங்களுக்கு உதவலாம்னு தோனி இருக்கும், ஆனா உதவி செஞ்சிருக்க மாட்டீங்க. ஆனா இனிமே அப்படி பண்ணாதீங்க. அடுத்த முறை யாருக்காவது உண்மையிலேயே உதவி தேவைப்படும்போது, இத ஞாபகம் வச்சுக்கோங்க. உங்க சின்ன Action ஒருத்தரோட வாழ்க்கையவே மாத்தலாம். 

Please, அந்த Bloody Bystander விளைவு உங்கள Takeover பண்ண விடாதீங்க. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com