The Effort Paradox: கஷ்டப்பட்டால்தான் வெற்றிபெற முடியுமா?

The Effort Paradox
The Effort Paradox

The Effort Paradox என்பது ஒரு தனிநபர் தான் விரும்பும் குறிப்பிட்ட விஷயங்களை முயற்சி செய்வதால் திருப்தி அடைகிறார் என்பதைக் குறிக்கும் முரண்பாட்டுக் கொள்கையாகும். ஒரு விஷயத்திற்கு நாம் எவ்வளவு அதிகமாக முயற்சி செய்கிறோமோ அவ்வளவு பலன் தரும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு இது சவால் விடுக்கிறது. இந்த பதிவில் Effort Paradox எந்த அளவுக்கு நம்முடைய வெற்றி உணர்வை பாதிக்கலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம். 

அதிகமாக முயற்சித்தால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தே இந்த முரண்பாடு தொடங்குகிறது. ஒரு விஷயத்திற்காக நாம் எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அவ்வளவு திருப்தியை கொடுக்கும் என நம்புகிறோம். இந்த எதிர்பார்ப்பால், நாம் பல விஷயங்களை முயற்சித்தாலும், அதன் வெற்றி உணர்வை நாம் மகிழ்ச்சியாக உணர முடிவதில்லை. 

நாம் ஏதோ ஒரு விஷயத்தில் முயற்சி செய்கிறோம் என்றால், அதன் விளைவாக நமக்கு அதிக மதிப்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில் நமது முயற்சியை வெற்றியுடன் தொடர்புபடுத்தி, வெற்றியடைவதற்கு முன்பே வெற்றி அடைந்துவிடுவோம் என தவறாக எண்ணுகிறோம். இது நமது இறுதி கட்டத்தை வெகுவாக பாதிக்கிறது. 

மிகவும் கடினமான பணிகளை செய்வதே நமக்கு வெற்றியைத் தரும் என நாம் தவறாக எண்ணுவதாக Effort Paradox சொல்கிறது. தடைகளை சமாளித்து விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாக சில வேலைகளை செய்வதைத் தாண்டி, வெற்றி அடைவது மட்டுமே நமது சுய மதிப்பையும், தனிப்பட்ட வளர்ச்சியையும் மேம்படுத்தும். 

நமது முயற்சிகளின் விளைவுகளை நாம் எப்படி மதிப்பிடுகிறோம் என்பதில் எதிர்பார்ப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  ஒரு பணி சவாலாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு கடினமான முயற்சி தேவைப்படும் என்பதைப் போன்ற விஷயங்களில் இருந்து கிடைக்கும் வெற்றியை பெரிதாகப் பார்க்கிறோம். இதற்கு மாறாக ஏதேனும் ஒன்றை எளிதாக செய்து சாதித்தால் அது நமக்கு பெரிய திருப்தியை அளிப்பதில்லை. 

அதிக முயற்சி அதிக திருப்திக்கு வழிவகுக்கும் என இந்த முரண்பாடு கூறினாலும், நாம் ஏதோ ஒன்றை முயற்சித்தோம் என்பதை நினைத்து நாம் கட்டாயம் மகிழ்ச்சியாக உணர வேண்டும். எல்லா வேலைகளுக்கும் பிறர் பின்பற்றும் அதே முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. சில முயற்சிகளுக்கு நீங்கள் நினைப்பதை விட குறைந்த செயல்பாடுகளே தேவைப்படலாம். அவை உங்களுக்கு அதிக திருப்தியை அளிக்காமல் போகலாம். ஆனால் அந்த செயலின் மூலமாக உங்களுக்கு கிடைத்த வெகுமதியை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். 

இதையும் படியுங்கள்:
Fatty Liver பாதிப்பு இருப்பவர்களுக்கான சிறந்த 7 உணவுகள்! 
The Effort Paradox

இந்த முரண்பாட்டை புரிந்து கொள்வதால், நீங்கள் எல்லா விஷயங்களுக்கும் கஷ்டமாகதான் முயற்சிக்க வேண்டும் என்றில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்களது தனிப்பட்ட அறிவு, மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி, பிறரை விட எளிதாகவும் துரிதமாகவும் ஒரு வேலையை செய்து சாதிப்பதும் வெற்றிதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். 

இது உங்களை Hard Work செய்யும் நபரிலிருந்து Smart work செய்யும் நபராக மாற்றும். ஒருவேளை இந்த பதிவில் நான் எழுதியது உங்களுக்கு சரியாக புரியவில்லை என்றால், The Effort Paradox என்பது “நீங்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டால்தான் சாதிக்க முடியும் என்றில்லை, கஷ்டப்படாமல் ஸ்மார்ட் வொர்க் செய்தும் சாதிக்கலாம்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com