வெற்றி பெற்றவர்கள் மறைக்கும் உண்மை! சத்தமில்லாமல் சிகரத்தைத் தொட ரகசிய ஃபார்முலா!

Success formula
Success formula
Published on

வெற்றியாளர் என்றால் ஊரே அவரைப் பற்றி பேச வேண்டும். அவர் எங்கிருக்கிறார் என உலகம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையான வெற்றி என்பது மற்றவர்கள் பார்வையில் படுவதில் இல்லை. வெளிச்சம் படாத இடத்திலும் இலக்கை நோக்கி நகர்வதில் தான் இருக்கிறது.

அமைதியாகவும், தேவையற்ற விளம்பரம் இல்லாமலும் வாழ்வது என்பது பயத்தினால் ஏற்படும் செயல் அல்ல. அது ஒரு தற்காப்பு வியூகம். சுற்றியுள்ள நச்சுத்தன்மை கொண்ட நபர்களிடமிருந்தும், பிறரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகளிடமிருந்தும் தப்பிக்க 'கண்ணுக்குத் தெரியாத மனிதனாக' வாழ்வதே சிறந்த வழி.

1. மௌனம் - ஒரு தற்காப்புக் கவசம்:

சாதிக்கப் போகும் இலக்குகளைப் பற்றி உரக்கச் சொல்லும்போது, அந்த வளர்ச்சியைத் தடுக்க ஒரு கூட்டம் தயாராகிவிடும். ஒரு மனிதனின் பலம் என்ன என்பது எதிரிக்குத் தெரியாதவரை அவர் பாதுகாப்பாக இருக்கிறார். திட்டங்களை ரகசியமாக வைப்பதன் மூலம் தேவையற்ற முட்டுக் கட்டைகளைத் தவிர்க்கலாம். வெளிச்சம் அதிகமாக விழும் இடத்தில் நிழலும் கருப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

2. கவனச் சிதறல்களைத் தவிர்த்தல்:

இன்றைய டிஜிட்டல் உலகம் மனிதர்களை எப்போதும் காட்சிப் பொருளாகவே இருக்கக் கட்டாயப்படுத்துகிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், தேவையற்ற நபர்களின் பார்வையில் பட்டு பொறாமைக்கு ஆளாகலாம். கவனத்தை சிதறடித்து, இலக்கிலிருந்து திசை திருப்பும். டிஜிட்டல் தடயங்களைக் குறைக்கும்போது, அபரிமிதமான நேரமும், மன அமைதியும் கிடைக்கிறது. அந்த அமைதி இலக்கை நோக்கி வேகமாக ஓட வைக்கும் உயர்ரக எரிபொருளாக மாறும்.

3. நச்சுத்தன்மை கொண்டவர்களிடமிருந்து விடுதலை:

அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒரு நபராக இருக்கும் போதுதான், சந்தர்ப்பவாதிகள் அணுகுகிறார்கள். யாரிடம் எவ்வளவு பழக வேண்டும், யாரை எந்த எல்லை வரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டால் சந்தர்ப்பவாதிகள் தானாகவே விலகிப் போவார்கள். இந்தத் தெளிவான வேலிதான் மன அமைதியைப் பாதுகாக்கிறது.

4. தேவையற்ற ஒப்பீடுகளைத் தவிர்த்தல்:

அமைதியாக செயல்படும் போது, பிறருடன் ஒப்பிடும் தேவையற்ற போட்டி மறைந்துவிடும். ஊர் மெச்ச வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதபோது, இதயம் விரும்புவதை நோக்கி உண்மையாகப் பயணிக்க முடியும். மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக ஓடுவதை நிறுத்தும் போது, சுயமான வளர்ச்சி தொடங்குகிறது. இந்தத் தனிமை தரும் தெளிவு தான் ஒரு சாதாரண மனிதனை மேதையாக மாற்றுகிறது.

5. கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்:

ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பலவீனங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். அங்கே தான் உண்மையான சுதந்திரம் பிறக்கிறது. இந்தச் சுதந்திரம் தரும் தன்னம்பிக்கை, எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகிறது. மறைந்திருக்கும் ஆற்றல் எப்போதுமே ஆச்சரியங்களை நிகழ்த்தும் வல்லமை கொண்டது.

இதையும் படியுங்கள்:
கோபம் வந்தா இனி சும்மா கத்தாதீங்க... இந்த 'சைலன்ட்' டெக்னிக் ஃபாலோ பண்ணுங்க!
Success formula

பின்பற்ற வேண்டிய வழிகள்:

குறைவான பேச்சு, நிறைவான செயல்: வெற்றி கிட்டும் வரை திட்டங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். அதிகம் பேசும் மனிதன் தன் ஆற்றலை வார்த்தைகளில் வீணடிக்கிறான்.

டிஜிட்டல் மௌனம்: சமூக வலைதளங்களில் அந்தரங்கத்தைப் பகிரும் பழக்கத்தைக் கைவிடுதல் அவசியம். இது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்கும்.

தனிமையை நேசித்தல்: கூட்டம் எப்போதும் மனதைக் கலைக்கும், தனிமை மட்டுமே ஒரு மனிதனைச் செதுக்கும் உளியாகச் செயல்படும்.

அமைதியாக இருப்பது பலவீனமல்ல, அது ஒரு கலை. தேவையற்ற வெளிச்சத்தில் இருந்து விலகி, இலக்கை நோக்கி நிழலில் பயணிப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்(Success formula) வந்து சேரும். உலகிற்குத் தெரியாமல் நகர்பவர்களே, உலகை ஆளும் தகுதி பெறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com