
பெரிய தேவையை தினசரி செய்யக்கூடிய சிறு சிறு வேலைகளாகப் பிரிந்துகொள்ள வேண்டும். ஒரு நல்ல காரியத்திற்காக பல லட்சம் ரூபாய் சேகரிக்க முடிவு செய்தார்கள். 1 லட்சம் ரூபாய் என்ற மலைப்பு இருக்கத்தான் செய்தது. குழுவின் தலைவர் சொன்னார். மொத்தம் லட்சம் என்பது இருக்கட்டும். நாம். 'மொத்தம் 50 உறுப்பினர்கள் இருக்கிறோம். ஆளுக்கு 5000 வசூல் செய்து தாருங்கள். போதும் ' மலைப்பு மறந்து போனது. அட வெறும் ஐந்தாயிரம்தானா? செய்துவிடலாமே!"
இதுதான் பெரிய இலக்குகளை வேலைகளைச் செய்யத்தக்க கனவாக உடைப்பது. இதனால் பல அனுகூலங்கள் உண்டு. செய்யக்கூடிய அளவிலான சிறு சிறு வேலைகளாகப் பிரித்துக் கொண்டால், செய்பவருக்கு வேலை புரியும். வேலை சீக்கிரம் முடியும்.
முதலாவதாக, வேலை செய்யுமிடத்தில் வளர்ச்சி என்கிற தேவையை எடுத்துக்கொள்ளலாம். எப்படி உடைப்பது என்பதைச் செய்தே பார்க்க இருக்கிறோம்.
உடைப்பதற்கு முன்பாக தேவையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சி என்பது உற்பத்திக் கூடத்தின் மேலாளர் ஆவது இன்னும் சிலவற்றை கூட அவர் வேலை இடத்தில் பெறவேண்டிய வளர்ச்சியாக கருதலாம் ஆனால் நாம் தற்சமயம் விரிவாக பார்ப்பதற்கு அந்த ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம்
இலக்கு என்றாலே. எது என்கிற தெளிவு இருப்பதுதான். வளர்ச்சி என்கிற பொதுவான சொல். இப்பொழுது, 'உற்பத்திக் கூடத்தின் மேலாளர் ஆவது' என்கிற தெளிவான இலக்காக மாறிவிட்டது. அப்படியென்றால், முன்னேற்றத்துக்கான அடுத்தபடி ஆகிவிட்டது என்று பொருள்.
இலக்கினை அடைவதற்கு முதலில் செய்ய வேண்டியது தகவல் திரட்டல். தன்னுடைய நிறுவனத்தில் பதவி உயர்வுக்கான வழிமுறைகள் என்ன? என்னென்ன தகுதிகள் இருப்பவரை மேலாளராக அவருடைய நிறுவனத்தில் தேர்வு செய்வார்கள். அமர்த்துவார்கள் இவற்றைப் பற்றி முழுமையாக சந்தேகம் இன்றி தெரிந்து கொள்ளுதல்தான் தகவல் திரட்டலின் முக்கிய பகுதி.
தகவல்களை திரட்டியவர்தான் அடைய வேண்டிய இலக்கினை அடைய ஒவ்வொரு படிக்கட்டுகளாக எடுத்து வைத்து மேலேரும்போது நிச்சயம் அவர் நினைத்த பதவியை அடைந்து விடுவார். அதாவது பெரிய காரியத்தை சிறுசிறு வேலைகளாக பிரித்து திறம்பட செய்தாலே இலக்கை அடைந்துவிடலாம்.