சிரிப்பின் மகிமை: ஒரு நகைச்சுவை மன்னரின் கதை!

Motivational articles
The glory of laughter
Published on

நாம் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதுகூட குபுக்கென்று சிரித்து விடுவோம். அக்கம், பக்கத்தில் பார்ப்பவர்கள் என்ன அப்படி ஒரு சிரிப்பு. எங்களிடமும் கூறேன். நாங்களும் கொஞ்சம் சிரிக்கிறோம் என்று கூறுவார்கள். ஆனால் எப்பொழுதோ, எதிலோ பார்த்ததோ படித்ததோ நம் ஞாபகத்திற்கு வரும். அந்த நகைச்சுவையை சரியாகக் கூட விளக்கிச்சொல்ல முடியாது.

அந்த மாதிரி தருணத்தில் நாமாகவே அதை நினைத்து நினைத்து சிரிப்பது உண்டு. அதுபோல் நாள் முழுவதும் ஒரு மனிதரை மிகவும் சந்தோஷமாக வைத்திருக்கும் மருந்து, உற்சாக டானிக் எது என்று கேட்டால் நகைச்சுவைதான்.

நம்ம நகைச்சுவை மன்னர் கலைவாணர் என், எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு திருச்சி ஜட்கா வண்டிக்காரர் சங்கத்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அவர்கள் தங்கள் சங்க ஆண்டு விழாக் கூட்டத்திற்கு தலைமை வகிக்குமாறு அவரை கேட்டுக் கொண்டார்கள். என்.எஸ்.கிருஷ்ணனும் ஏற்றுக்கொண்டார்.

ஆண்டு விழாக்கூட்டம் தொடங்கியது. தலைமை உரையாற்ற என். எஸ். கிருஷ்ணன் எழுந்தார். கலைவாணரின் பேச்சு கற்கண்டு போல் இனிமை உடையதாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆதலால் கூட்டமும் உற்று நோக்கியது.

அப்பொழுது என்.எஸ். கிருஷ்ணன் தன் பேச்சைத் தொடங்கினார். உங்களின் சங்க கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைபோல் நல்ல உள்ளம் பெற்ற மக்களிடையே இருப்பதில் நான் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைப்பவன். நானும் எங்கெல்லாமோ சுத்தி இருக்கிறேன். ஆனால் உங்களைப்போல பரந்த நோக்கமும், பெருங்குணமும் பெற்ற மக்களை நான் பார்த்ததில்லை.

எங்கு பார்த்தாலும் இந்தக்காலத்தில் பொறாமையும், பூசலுமே நிலவக் காண்கிறோம். ஆனால் நீங்கள் மட்டும் எளிமையும், இனிமையும் உள்ள மக்களாய் என்றும் இருந்து வருகிறீர்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்ற என்ற எண்ணமும் உங்களிடம்தான் இருக்கிறது .உங்களிடம் எனக்கு நிரம்ப பிடித்தது இதுதான்.

நீங்கள், உங்கள் வண்டியில் யார் ஏறினாலும் சரி, நீங்கள் சொல்லக்கூடிய "முதல் வார்த்தை முன்னுக்கு வாங்கோ! முன்னுக்கு வாங்கோ! என்பதுதான்". இந்த காலத்திலே யார் இப்படி சொல்கிறார்கள். இது ஒன்று போதும். உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்ள என்று கூற கூட்டமே சிரிப்பலையில் மிதந்தது.

இந்த ஒரு நிகழ்வு போதாதா? எண்டார்ஃ பின்கள் முறையாக சுரந்து நமது எண்ணங்கள் மேம்பட, மன அழுத்தம் குறைய, மனம் மற்றும் உடல் வலிகள் குறைய. அதோடு மட்டுமில்லாமல் சமூகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் போதும், சக மனிதர்களுடன் இணக்கமான தொடர்பு ஏற்படுத்தி பரஸ்பர அன்பையும், நம்பிக்கையும் பரிமாற்றம் செய்யும்போதும் ஆக்சிடோசின் சுரக்கிறதாம்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியும் சந்தோஷமும் நம்முடமே உள்ளது. அதைத்தொலைக்க வேண்டாமே!
Motivational articles

டோபோமின் சுரப்பு ஊக்கம் தரும் செயலுக்கு வழிகாட்டுகிறது என்கிறார்கள். செரடோனின் நம்மை நல்லபடியாக உணரவைக்க தேவையான ஹார்மோனை சுரந்து உதவியை செய்கிறது. ஆக நகைச்சுவையுடன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பொழுது எல்லா உறுப்புகளும் சரிவர இயங்கி உடலை ஆரோக்கியமாக காக்கிறது என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய உண்மை. ஆதலால் நோய் விட்டுப்போக வாய்விட்டு சிரித்து என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் ஆக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com