
நம்முடைய முதல் கடமை தன்னைத்தானே வெறுக்காமல் இருப்பதுதான். எவன் ஒருவன் தன்னை நம்பவில்லையோ அவன் இறைவனையும் நம்பாதவன்தான். நம்பிக்கை, தன்னம்பிக்கை அதுவே இறை நம்பிக்கை.
இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான். அதற்கு பணிந்து போவதற்கன்று. நேர்மையுடன் உழைத்தால் அதற்குரிய பரிசாக முன்னேற்றத்தை அடைவாய்.
பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடக்கவேண்டும் அவை: ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம் ஆகியவை. எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் ஒழுங்கும் நேர்த்தியும் இருப்பது அவசியம்.
உலகம் பெரியதொரு பயிற்சிச்சாலை. நம்மை வலியவனாக்கி கொள்வதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம்.
உண்மையை ஆயிரம் விதமாக உரைக்கலாம் அவற்றில் ஒவ்வொன்றும் உண்மையே இன்றி வேறன்று.
மனிதன் ஒரு போதும் இறப்பதில்லை, பிறப்பதும் இல்லை, உடலே சாகிறது. மனிதன் ஒருபோதும் சாவதில்லை.
நீ ஏதாவது செய்ய விரும்பினால் உன் பெற்றோர்களின் முன்னிலையில் செய். கீழ்படிதலை அறிந்தவன் உனக்கே கட்டளையிடும் அதிகாரம் உண்டு.
வீண் ஆடம்பரம், வலிமையின்மை முதலியன தோன்றும்போது இது உனக்கு உகந்தன்று; உகந்தன்று என்று ஆன்மாவிடம் கூறு.
சுகம் தன் தலை மீது துக்கமென்னும் கிரீடத்தை தரித்துக் கொண்டு மனிதன் முன்னே வருகிறது.சுகத்தை வரவேற்கிறவன் துக்கத்தையும் அனுபவிக்க தயாராக இருக்கவேண்டும்.
உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கலாகாது.
எல்லோரிடமும் தர்ம சிந்தனை உடையவனாக இரு.துன்பப்படுவோருக்கு கருணை காட்டு. மனிதில் வெறுப்புக்கு இடம் அளிக்காதே. வெறுப்பு கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
எவன் ஒருவன் தன்னைக் குறித்து மிதமிஞ்சிய எச்சரிக்கை உடையவனாக இருக்கிறானோ அத்தகையவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆபத்துக்கு ஆளாகிறான்.
யார் ஒருவன் தனக்கு உள்ள கெளரவமும், மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடியே இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.
நஷ்டம் வந்துவிடுமோ என்று எவன் ஒருவன் எப்போதும் பயந்துகொண்டே இருக்கிறானோ அத்தகையவன் நஷ்டத்தையே அடைகிறான். இவற்றை எனது வாழ்நாளில் பார்த்திருக்கிறேன்.
ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட, அனைத்தும் நமக்கான பாடம் என்று அனுபவமாய் எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்.
உன் திறமையை பாராட்ட சிலர் இருக்கும்போது பொறாமையில் பேசும் பலரைப் பற்றிய பயமோ, பதட்டமோ உனக்கு தேவையில்லை.
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலைமையை உருவாக்கு. அதுதான் உன் மிகப்பெரிய வெற்றி.