உங்கள் வாழ்க்கையை மாற்றும் The Goldilocks விதி! 

The Goldilocks Rule
The Goldilocks Rule That Will Change Your Life!
Published on

நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் மோட்டிவேஷனை இழந்து தவித்திருப்போம். நம்மை நோக்கி இழுக்கும் எண்ணங்கள், நம்மை தடுக்கும் சோதனைகள் என இரண்டுக்கும் இடையில் நாம் சிக்கிக் கொள்வோம். இந்த நிலையிலிருந்து எப்படி வெளிவரலாம் என்ற கேள்விக்கான பதிலை தரும் ஒரு சுவாரசியமான கோட்பாடு தான் கோல்டிலாக்ஸ் விதி. 

கோல்டிலாக்ஸ் ஒரு ஐரோப்பிய நாட்டுப்புறக் கதையின் கதாநாயகி. அவளுக்கு மிகவும் பொருத்தமான உணவு, இருக்கை என எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கும் அவளது திறமைதான் இந்த விதியின் அடிப்படை. அதேபோல நம் வாழ்க்கையிலும் நமக்கு பொருத்தமான இலக்குகள், செயல்கள் மற்றும் சூழலை தேர்ந்தெடுக்கும்போது, நாம் ஊக்கத்துடன் இருப்போம். இந்த பதிவில் கோல்டிலாக்ஸ் விதியைப் பற்றியும், அதை நாம் நம் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம். 

உடல் மற்றும் மன ஆரோக்கியம்: ஒரு குழந்தைக்கு அதிகப்படியான சாக்லேட் கொடுப்பது போல, நமது உடல் மற்றும் மனதிற்கு அதிகப்படியான வேலைகளை கொடுக்கும்போது அவை சோர்வடையும். அதேசமயம் அவற்றிற்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் அவை வளர்ச்சி அடையாது. எனவே, நமது உடல் மற்றும் மனதிற்கு தேவையான அளவு உறக்கம், உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவற்றை அளிப்பது முக்கியம். 

இலக்குகள் மற்றும் செயல்கள்: நாம் நிர்ணயிக்கும் இலக்குகள் நம்மை ஊக்குவிக்கவோ அல்லது சோர்வடையவோ செய்யலாம். எனவே, நம் திறமைகள், ஆர்வங்களுக்கு ஏற்ற இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். அதேபோல, நாம் செய்யும் செயல்களும் நம்மை ஊக்குவிக்க வேண்டும். செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நாம் நேர்மறையான ஆற்றலைப் பெறலாம். இத்துடன் நாம் வாழும் சூழல் நம்மை பெரிதும் பாதிக்கிறது. நேர்மறையான மக்களுடன் இருப்பது, நம்மை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கிக் கொள்வது ஆகியவை நாம் எப்போதும் மோட்டிவேஷனுடன் இருக்க பெரிதும் உதவும். 

இதையும் படியுங்கள்:
அதிகமான ஷாப்பிங் செய்வதை கட்டுப்படுத்த 7 நாள் விதி!
The Goldilocks Rule

இந்த கோல்டிலாக்ஸ் விதி, வாழ்க்கையில் ஊக்கத்தை தக்க வைக்க ஒரு சிறந்த வழிகாட்டியாகும். நமக்கு பொருத்தமான இலக்குகளை வைத்து நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டு நேர்மறையான சூழலை உருவாக்கிக்கொள்ளும்போது நாம் எப்போதும் ஊக்கத்துடன் இருக்கலாம். இதை சரியாக நாம் புரிந்து கொண்டாலே வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியடைய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com