
உலகம் புகழ்பெற்ற ‘மோனாலிசா' ஓவியத்தை வரைந்த ஓவியரும், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், கட்டட வடிவமைப்பாளர், சிற்பி மற்றும் விஞ்ஞானி என பன்முகத் திறமை கொண்ட இத்தாலிய அறிஞர்தான் லியோனார்டோ டாவின்சி. இடது கை பழக்கம் உடைய இவரின் மிக சிறந்த ஓவியங்களில் ஒன்றான ‘சால் வேட்டர் முண்டி' எனும் ஓவியமே உலகில் அதிக விலைக்கு (450 மில்லியன் டாலர்) ஏலம்போன கலைப்பொருள் ஆகும். மேலும் ‘இறுதி விருந்து’, வெள்ளை கீரியுடன் ஒரு பெண்’, போன்ற பல புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்துள்ளார். சிறுவயதிலிருந்தே ஓவியம் தீட்டுவதில் திறமை பெற்றிருந்தார். தனது படைப்புகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் பெற்றார்.
லியோனோடோ டா வின்சியின் பொன்மொழிகள்
1. நேரத்தை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும்.
2. தீமையை எதிர்த்து முதலிலே போராடுவது இறுதியில் போராடுவதை விட எளிதானது.
3. நீங்கள் தனியாக இருந்தால் நீங்கள் முழுவதுமாக உங்களுக்கே சொந்தம்.
4. ஒரு ஓவியர் தனது மனம் மற்றும் கைகளில் பிரபஞ்சத்தை வைத்திருக்கிறார்.
5. வாழ்க்கையை மதிக்காதவன் அதற்கு தகுதி அற்றவன்.
6. நன்றாக செலவழிக்கப்பட்ட நாள் மகிழ்ச்சியான தூக்கத்தை தருவதைபோல, நன்றாக பயன் படுத்தப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியான மரணத்தை தருகிறது.
7. தீமையை தண்டிக்காமல் இருப்பது அதை அங்கீகரிப் பதற்கு சமமாகும்.
8. யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாற மாட்டான்.
9. நீங்கள் நினைப்பதை விட மூளை மிகவும் சிறப்பானது. அதை பயன்படுத்துங்கள்.
10. ஒழுக்கமே நமது உண்மையான செல்வம்.
11. உங்களுக்கு புரியாத விஷயத்தை புகழ்வது தவறானது. குறை கூறுவது மோசமானது.
12. மற்றவர்களின் வார்த்தைகளை விட அனுபவமே ஒரு உண்மையான வழிகாட்டி ஆகும்.
13. நீங்கள் பார்ப்பதை நீங்கள் நம்பினால் மட்டும் போதாது. நீங்கள் பார்ப்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும்.
14. பயன்படுத்த படாததால் இரும்பு துருபிடிக்கிறது. தேங்கி நிற்பதால் நீர் அதன் தூய்மையை இழக்கிறது. அதேபோல செயலற்றத் தன்மை மனதில் வீரியத்தை குறைக்கிறது
15. கல்வி நிறைவு எட்டிய தில்லை என்று நினைப்பவர்களே உண்மையில் அதிகம் கற்றவர்களாக இருக்கிறார்கள்.
16. கற்பனை என்பது அறிவிற்கு தாயாகும். சிந்தனை மற்றும் கற்பனை வாழ்க்கையின் சிறந்த செயல்பாடுகளுக்கு ஆதாரமாக உள்ளது.
17. ஐம்புலன்களும் ஆன்மாவின் அமைச்சர்கள்.
18. உங்கள் நண்பரை ரகசியமாக கண்டியுங்கள்,வெளிப்படையாக புகழுங்கள்.
19. காதல் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை.
20 கூச்சல் இருக்கும் இடத்தில் உண்மையான அறிவு இல்லை.
21. ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான்.
22. மனிதன்தான் உண்மையிலேயே மிருகங்களின் அரசன். ஏனெனில் அவனின் கொடூரத்தனம், மிருகங்களையே மிஞ்சியது.
லியோனார்டோ டா வின்சியின் பொன்மொழிகளில் அவருடைய புத்திசாலித்தனம், அறிவியல் நோக்கு மற்றும் கலையுணர்வை பிரதிபலிக்கின்றன.