இறைவனுக்கு அடுத்த நிலையில் இருக்கிற மனிதன் மகத்தான சக்தி கொண்டவன். மனித மனதின் சக்திக்கு காலமும் கிடையாது தூரமும் கிடையாது. அது முக்காலங்களைக் குறித்தும் முடிவு எடுக்கக் கூடியது. மனிதன் கடந்த காலத்திலேயே வாழ்ந்திடவும் முடியும், நிகழ் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும், எதிர்காலத்திலும் வாழ முடியும். அதே சமயத்தில் எல்லா காலங்களையும் போட்டு குழப்பிக் கொள்ளவும் முடியும். ஒரு மனிதன் தன் எண்ணச் சக்தியின் வழியாக ஒரு காரியத்தை ஒரு முறைக்கு பலமுறை எண்ண அதுவே ஒரு பெரிய எண்ணத்தின் சக்தியாக மாறுகிறது. அந்த எண்ணத்தின் ஆற்றல் அப்படியே நிஜமாகவே உருவெடுக்க வைத்து விடுகின்றது.
அதை போன்று மனிதனுடைய சொல் சக்தியின் வழி. ஒரு காரியத்திற்காக சொல்லை பலமுறை சொல்லச் சொல்ல அதுவே ஒரு பெரிய சொல்லின் சக்தியாக மாறி அதை நிஜமாகவே உருவெடுக்க வைத்து விடுகின்றது. அதேபோன்று மனிதனின் செயல் சக்திக்கு வழி. ஒரு காரியத்தை தொடர்ந்து ஒரு முறைக்கு பலமுறை செய்யச் செய்ய அதுவே பெரிய செயல் சக்தியாக மாறி அப்படியே நிஜமாகவே உருவெடுத்தும் விடுகின்றது. இத்தகைய மனித மன விதி மிக வேகமாகனது மிக மிக வலிமையானது.அதிவேகத்தன்மை உடையது சந்திரனில் கால் பதித்த மனிதன் அடுத்து செவ்வாயில் கால் பதிக்க தன் மன வேகத்தைக் கொண்டு பிரயாசை பட்டுக்கொண்டிருக்கிறான். அதோடு சந்திரனில் குடியிருப்புக்கு என்ன செய்யலாம் எனும் திட்டங்களையும் மனதில் வேகத்தைக் கொண்டு செய்து வருகிறான்.
மனிதனால் பாலைவனத்தை சோலையாக்கி விட முடியும். சோலை வனத்தையும் பாலைவனமாக்க முடியும். காரணம் மனதினுடைய வேகம் அத்தகையது. இது இறைவன் கொடுத்திருக்கும் அரிய அத்புத பொக்கிஷம். இந்த அத்புத மனவிதி வேகத்தின் பாக்கியத்தையும் இறைத் தொடர்பாளர் என்ற அந்தஸ்தையும் உணராத மனிதர்கள்தான், அர்த்தமற்ற, அடிப்படை ஆதாரமற்ற வீணான நம்பிக்கை விதி முறைகளில் சிக்கிக்கொண்டு தன் மன வலிமையை உணராமல் கிரக நம்பிக்கைகளிலும், கிரக தோஷங்களிலும் சார்ந்து கொண்டு மனவிதியின் வேகத்தையும் ஆற்றலையும் சிதறடித்து சின்னா பின்னம் ஆகிறார்கள்.
கிரகங்கள்தான் ஆட்டிப் படைக்கின்றன என்றால் இறைவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்ற மன விதியின் வேகத் தன்மை அர்த்தமற்றதாக ஆகிவிடும். எனவே மனிதர்கள் இறைவன் தங்களுக்குத் கொடுத்திருக்கின்ற அத்புத மன விதியின் வேகத்தை, எந்த ஓர் அர்த்தமற்ற, ஆதாரமற்ற கிரக நம்பிக்கை விதிமுறைகளில் சிக்கிவிடாமல், தெளிவான, அர்த்தமுள்ள ஆதார அடிப்படை உண்மைகளைக் கொண்ட நம்பிக்கைளகளின் மீது செலுத்தி தங்கழுடைய மனவிதியின் வேகத்தை ஓரு அர்த்தமுள்ள நிலையில் பயன்படுத்த வேண்டும்.