சாதனையாளர்கள் சொல்லும் அந்த ஒரு மந்திரம் - 'ஆர்வம்' தரும் அசாத்திய சக்தி!

power of passion tamil motivation
power of passioncredits AI Image
Updated on

ந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை; இருந்தால் வேலைக்கு ஆகாது. அதேபோல், ஒவ்வொருவருடைய விருப்பங்களும் வேறுபட்டு மாறுபட்டிருக்கும். ஒரு தனிநபரின் விருப்பம் முழுமையடைய 'ஆர்வம்' பெரிதும் உதவும். ஆர்வத்தோடு செய்யப்படும் (power of passion) எந்தப் பணியும் தனித்துவம் பெற்று, முடிவில் மனநிம்மதியை ஈட்டிக் கொடுக்கும்.

ஆர்வம் என்பது மேலும் ஆர்வம் காட்ட ஓர் உந்து கோலாகச் செயல்பட்டு, முழு ஈடுபாட்டுடன் செயல்படத் தூண்டும். எடுத்துக்கொண்ட பணியை முடிக்க ஆர்வம் காட்டினால், "அந்தப் பணியைத் திறம்பட முடிக்க வேண்டும்" என்ற எண்ணம் மனதில் பதிந்து, தானாகவே அந்தப் பணி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும்; அது சம்பந்தமான விவரங்களைச் சேகரிக்க முனைப்பு காட்டும் குணமும் மேலோங்கும்.

செயல்பாடு தொடரும்போது, விருப்பம் அதிகரிக்க ஆர்வம் மௌனமாக உதவும். அதுமட்டுமல்லாமல் புதிய முறைகள், நூதன வழிகள் ஆகியவற்றின் மூலம் தேவையான விவரங்களைச் சேகரிக்க ஆர்வம் தொடர்ந்து பணியாற்றும். இது ஒரு தனிநபரின் முயற்சிகளை மேலும் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் செய்யத் தூண்டும்; அத்துடன் புதுமையான முறைகளை சோதனை செய்து பார்க்கவும் ஆர்வம் துணை நிற்கும்.

ஆர்வம் என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட சக்தியை பட்டை தீட்டிக்கொள்ளப் பெரும் உந்து சக்தியாகத் திகழும். அத்தகைய சக்தி, சாதனை புரியவும் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கத் தேவையான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் சிறந்த அடித்தளமாகச் செயல்படும். ஆர்வம், இடையில் தொய்வு ஏற்படாமல் உற்சாகம் ஏற்படுத்தும் கருவியாகச் செயல்பட்டு, நம்மைத் தொடர்ந்து பயணிக்க வைக்கும்.

'எப்படியாவது சாதிக்க வேண்டும்' என்பதற்குத் தேவையான மனோதைரியத்தை ஆர்வம் உருவாக்குகிறது. அத்துடன், எதிர்கொள்ளும் எதிர்பாராத இன்னல்களையும் பிரச்னைகளையும் சமாளித்துக் கடந்து செல்ல வேண்டிய தன்னம்பிக்கையை அளிக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தைக் கையாள வேண்டிய விவரங்கள் மற்றும் முறைகளைப் பற்றிச் சரியாக நினைவு கூறவும், அவற்றைச் சரிவர மேற்கொள்ளவும் வேண்டிய சக்தியை அளிக்கும் ஓர் உறுதியான மேடையாக (Strong platform) இது அமைகிறது. இக்கட்டான நிலைமையைக் கடந்து தொடர்ந்து பயணிக்க ஆர்வம் பெரும் சக்தியாகப் பயன்படும்.

இதையும் படியுங்கள்:
'எனக்கு அதிர்ஷ்டம் இல்லையே' என்று வருந்துபவரா நீங்க? ஏனுங்க இப்படி? இது உங்களுக்கு...
power of passion tamil motivation

ஆர்வம் கொண்டவர்கள் எல்லா வகை முயற்சிகளையும் தன்னம்பிக்கையோடு மேற்கொண்டு, வென்று சாதித்து, அடுத்த புதிய முயற்சிகளிலும் ஆர்வத்தோடு தொடர்வார்கள். அவர்களுக்குத் தெரியும்—ஆர்வம் என்பது ஒரு வலிமையான உந்து சக்தி என்று!

logo
Kalki Online
kalkionline.com