நல்லுறவுகளுக்கான திறவுகோல்: மரியாதையான வாழ்வு!

Motivational articles
good relationship
Published on

ரியாதை என்பது விலையுயர்ந்த முத்துக்கு சமமானது. மரியாதையில் உழைப்பு பெரிது. உழைப்பில் மரியாதை பெரிது. அதில் நிறைய சலுகைகள் பூர்த்தியாகின்றன. தேவைகள் வெகுவாக முடிகின்றன. மரியாதை என்பது பணத்தை விட பன்மடங்கு பலனைக் கொடுப்பது. குணத்தின் மூலமும் செயலின் மூலமும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையை விரும்புகின்றனர்.

மரியாதையை விரும்புபவர் பணத்தை மதிப்பவர் இல்லையேல், மானத்தை மதிப்பவர் என்பவர்கள், பிறர் விருப்பத்துக்கும், அவமானத்துக்கும், வீண்பழிக்கும் ஆளாகாமல் தன்னை காப்பாற்றி கொள்பவர் மானஸ்தனாவார். இவர் பொறுமையும், சக்தியும் வாய்ந்தவர் ஆவார். மரியாதை என்பது குறைந்தால் சோம்பேறி ஆக்கும்.

உழைப்பவர்களைத் தடுக்கும். கடமைகளை மறக்கும் மரியாதைக்கும், அறிவுரைக்கும் தொடர்பு உண்டு. நல்ல அறிவுரைகளாக இருக்க வேண்டும். அதுவும் சமயத்துக்கு சமயம் செய்ய வேண்டும். அதிகமாக அழுத்தாதவாறு போக்கில் சொல்ல வேண்டும். கண்டிப்புக் கூட சற்று பயத்தை கொடுக்கும். அது கூட அதிர்ச்சியை கொடுக்கக்கூடாது.

கௌரவத்தை பேண தெரியாதவனுக்கு ஆண் பிள்ளை பிறந்தாலும், பெண் பிள்ளை பிறந்தாலும் விதி ஒன்றுதான் கௌரவம் என்பது மரு மகளுக்கும், மருமகனுக்கும் சிறப்பான பரிசுகள். மரியாதை என்பது பொது இடங்களில் தன்னுடைய பொருட்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி வைத்துக்கொண்டு நடந்து செல்வர். ஓட்டமும், சட்டமும் பொது இடங்களில் வைத்துக் கொள்வதில்லை.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை மாற்றும் எட்டு சின்னஞ் சிறிய பழக்கங்கள். (Micro habits)
Motivational articles

வாழ்வில் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்பது போல் கிடைத்த இடத்தை நழுவவிடாமல் பாதுகாத்தலே மிக சிறந்ததாகும். மரியாதையை காப்பாற்ற கல்வி அறிவு மட்டுமல்ல பணமும், குணமும் கலந்த மேன்மையும் தேவைப் படுகின்றது. மரியாதை என்பது குடும்பத்தை பொறுத்தவரை கணவன் மனவியிடமும், மனைவி கணவனிடமும் கூட காட்டுதல் அவசியமாகும்.

மரியாதை என்பது தலையில் வைத்து கஷ்டப்பட்டு சுமப்பதல்ல. இவர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கும்போது சொத்து சுகங்களை அடிப்படையாக வைத்து கொள்வதன் மூலம் மரியாதை காப்பாற்றப்படுகிறது. பணம், நற்குணம் இரண்டையும் பேணுபவனுக்குதான் மரியாதை என்பது கிடைக்க வாய்புண்டு. இவை இரண்டும் இருப்பினும் அறிவும் தேவைப்படுகிறது.

மரியாதை என்பது சித்தமும் சேர்ந்ததாகும். சுத்தம் இல்லாதவர்கள் சபைக்கு உதவ மாட்டார்கள். வயிற்றுக்கு இல்லாதவர்கள் உழைப்பவர்களை குறை கூறுவது தவறு. மரியாதை உள்ளவர்கள் சுத்தமான இதயமும், ஜீரணிக்கும் சக்தியும் உடையவர்களாகும். இத்தகையவர்கள்தான் கௌரவத்தை காப்பாற்ற முடியும்.

மரியாதையானவர்கள் எப்போதும் பிறரை தணிப்பவராக வும், உழைப்பவராகவும், அன்பானவராகவும், ஆக்க பூர்வமானவராகவும், சற்று பொறுமை எடுத்துக் கொள்பவராகவும், கடவுள் பக்தி உடையவராகவும், கொஞ்சம் பணம் இருப்பினும் நிறைய இருப்பது போன்ற மனநிறைவோடு காணப்படுவர்.

மரியாதைக்குள் கடமைகளுண்டு வேலைகளுக்கு, பாதுகாப்பு உண்டு, இடம் உண்டு, மேல் பார்வை உண்டு, அறிவு உண்டு, வெற்றி உண்டு. மனைவியை மரியாதையாக நடத்துபவர் உயர்ந்தவர். மரியாதையோடு தோற்றமும் சேரும்போது அது கம்பீரத்தையும், தேவையையும் கொடுக்கின்றது. மரியாதையை தேடுபவர்கள் அறிவு, பணம், உழைப்பு என்று ஒவ்வொரு நிமிடமும் தேடுதல்.

இதையும் படியுங்கள்:
தனித் தனி தீவுகளில் வாழாதீர்கள்..!
Motivational articles

கௌரவம், பாதுகாப்புக்குதான். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. எனவே அதனை நம்புதல் அவசியம். எனவே அவரவர் வேலையை அவரவர் மதிப்பது அவசியம். அதற்காக கவனக்குறைவும், விரக்தியும் தேவையில்லை.

மதிப்பும், மரியாதையும் எதற்கு கொடுக்கப்படுகின்றதோ அதை பொறுத்து வாழ்வும் அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com