
நாலு பேருக்கு நன்றி யாா் அந்த நாலுபோ்? நம்மை சுமந்து செல்வதற்கா, நம்மோடு பேசி உறவாடி நாம் நொடித்துப் போனால் நம்மைக்கண்டு எள்ளி நகையாடும் சில உறவுகளுக்கா? அல்லது சந்தர்ப்பம் பாா்த்து விலகிச்செல்லும் சில சுயநல நட்புகளுக்கா, எதை சொல்வது எதை தவிா்ப்பது.
கவிஞர் ஒரு பாடலில் சொல்லியிருப்பாா்,
"ஆற்று வெள்ளம் தானே ஓடும், ஆசைவெள்ளம் சொந்தம் தேடும், சொந்தபந்தம் இல்லை என்றால், அந்த நேரம் நால்வரும் வேண்டும்.
என்ன ஒரு அற்புதமான வரிகள், சொல்லாடல், அது சரி நமது வாழ்க்கை நம் கையில்தான். அந்த நாலுபேரும் வருவாா்கள் நான்கு தினம் பேசுவாா்கள் அவரவர்களுக்கு தோன்றியதை இலவச ஆலோசணையாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாா்கள்.
சிாிப்பும் கண்ணீரும் சிறந்த ஜோடி. இரண்டும் அடிக்கடி சந்திப்பதில்லை. அது போலவே இன்பமும் துன்பமும், துன்பமும் இன்பமும் சில நேரங்களில் வந்துபோகும்.
ஒருநாள் வலிக்கும், மறுநாள் வெறுத்துப்போகும், சில நாளில் எல்லாமும் பழகிவிடுமே!
இவை அனைத்திற்கும் இறைவனின் திருவிளையாடல் மட்டுமே காரணம். அதே நேரம் நம்மிடம் இருக்கும் நாலு பேரை நாம் சரிவர பயன்படுத்துபவனே புத்திசாலி.
நம் வாழ்க்கை நம்கையில், நாம் உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்தால் நம்மை புறந்தள்ளியவர்கள் அப்போது வந்தாா்கள், சென்றாா்கள், அவ்வளவுதான்.
அது சமயம் கூடவே பெருமையுடன் வந்து, பொறாமையுடன் போவாா்கள். நொடித்துப்போனால் திரும்பிப் பாாக்கவே மாட்டாா்கள்.இதுதான் நிலையில்லா உலகம்.
நாம் அந்த நாலு பேரை ஏன் நம்பவேண்டும்? அது நிலையற்றது
நமக்கு இறைவன் பரிசாகக் கொடுத்த பல நோ்மறையான பலவிஷயங்களில் முக்கியமான நாலு விஷயங்களை கடைபிடியுங்கள்,
"உண்மை, நோ்மை, உழைப்பு, விடாமுயற்சியடன் கூடிய வெற்றி,"
இந்த நான்கு மூலாதாரங்களையும் கடைபிடியுங்கள் .
வாழ்க்கை எனும் சிகரம் அருகில் தொியும்.
நம் வாழ்க்கை நம்கையில்தானே உள்ளது, அதனால் நமது முடிவுகள் நமக்கானதாகவே இருக்கட்டும். உண்மை எனும் நிலத்தில், நோ்மை எனும் கலப்பையால் உழுது, உழைப்பு எனும் நீா்கொண்டு, பயிரை வளருங்கள் விடா முயற்சியுடன் கூடிய வெற்றியை அமோக அறுவடை செய்யுங்கள். அதுவே சிறப்பானது!