
இறைவன் படைப்பில் மனிதர்களிடம் இத்தனை நிறங்களா? அதோடு இத்தனை குணங்களா? என ஆச்சர்யப்பட வைக்கிறது!
சிலரது குணங்களில் பொது நலன் கலந்திருக்கிறது. சிலரிடம் சுயநலமே அதிகமாக தொடர்கிறது. அதோபோல பெறாமை குணம் சிலரிடம்குடிவந்துவிடுவதும் இயல்பே.
இதனில் சிலரிடம் வெகுளித்தனம் நிறையவே இருக்கும். சிலரிடம் கூட இருந்தே குழிபறிக்கும் எண்ணமும் உண்டு. சிலரிடம் மன்னிக்கும் குணம் உண்டு. அது சிலரிடம் மிஸ்ஸிங்.
ஒரு நிறுவனத்தில் பணியாளர் ஒருவர் தன்னை அறியாமல் தவறு செய்துவிட்டாா். அதற்கான நஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டுவிட்டாா்.
மன்னிப்பும் கேட்டுவிட்டாா். அப்புறம் என்ன அவரை மன்னிக்கும் குணம் இல்லாமல் அவர் செய்த தவறையே சுட்டிக் காட்டிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்!
சரி அவரை வேலையில் இருந்து நீக்கலாமே! அதுதான் முடியாது காரணம், அவர் உழைப்பை சுரண்ட வேண்டுமே!
இது ஒரு வகையான குணம். பொதுவாக மிகப்பொிய வெகுமதியே மன்னிக்கும் குனமாகும். அதை உணர்ந்து நடந்துகொள்வதே நல்லது.
அதேபோல பிறரிடம் வேண்டாத குணம் அடுத்தவர் மீது வெறுப்பு நயவஞ்சக செயல் அந்த பழக்கமும் ஆரோக்கியமானதல்ல.
மனிதனின் குணங்களை வெறுக்கலாம் அவரையே வெறுப்பது அவ்வளவு நல்லதல்ல.
சரி அடுத்த விஷயமாக கூட இருந்தே குழிபறிப்பது. அது மிகவும் தவறான செயல். அதன் பலன் அன்றைய தினம் நன்றாக இருக்கலாம், ஆனால் இறைவனின் கணக்கிலிருந்து தப்பவே முடியாதே.
ஒரு டவுனில் பலபொருட்களை தயாா் செய்து சந்தைப்படுத்திவரும் வியாபாாியிடம் கிராமத்தில் உள்ளவர் சூடம், மெழுகு வத்தி சப்ளை செய்துள்ளாா். நிறைய அளவு அந்த டவுன் வியாபாாியே வாங்கியுள்ளாா். சூடம், மெழுகு தயாாிக்கும் நபரோ வங்கியில் லோன்போட்டு மெஷின் வாங்கி உற்பத்தி செய்து பொருட்களை சந்தைப்படுத்திவருபவர். அதுதான் அவருக்கு ஜீவனம்.
தீடீரென ஒரு நாள் காாில் வந்து சூடம் நிறைய ஆா்டர் கொடுத்துள்ளாா். பத்து நாட்களில் சப்ளை செய்ய வேண்டும் எனவும் சொல்லியுள்ளாா். அதோடு எப்படி தயாாிக்கிறீா்கள் பாா்க்கலாமா என கேட்டதும் இந்த வெகுளியான நபர் அனைத்தையும் சொல்லிக் கொடுத்துள்ளாா். அவ்வளவு தான் மறுநாளே கோயம்புத்தூா் சென்று சூடம், மெழுகு தயாாிக்கும் மெஷின்களை தருவித்து உற்பத்தியும் செய்து அனைத்து கடைகளுக்கும் கிராமத்து வியாபாாி கொடுக்கும் விலையைவிட ஒரு ரூபாய் குறைவாக தருகிறேன் என ஆா்டர் எடுத்துவிட்டாா்.
அந்த கிராமத்து வியாபாாியிடம் கொடுத்த ஆா்டரையும் அடிமாடு விலைக்கே வாங்கியுள்ளாா். இதுபோல துரோகம் செய்யலாமா எனக்கேட்டதற்கு, நீ செய்யும் தொழிலை நான் செய்யக்கூடாதா? என ஏட்டிக்குப் போட்டியாக பேசியுள்ளாா்.
அந்த கிராமத்து வியாபாாியின் மனது என்ன பாடுபட்டிருக்கும் .
இது கூட இருந்தே குழிபறிக்கும் குணம்தானே ஆக இதில் யாரை நம்புவது நம்பாமல் போவது! இது போலத்தான் சிலரது குணங்களான அடுத்துக்கெடுக்கும் நிலை மாறவேண்டும். தொிந்தே தவறு செய்யும் பழக்கம்கு றையவேண்டும். நமது ஒவ்வொரு அசைவும் இறைவனின் கணக்கில் வந்துகொண்டு இருப்பதே நிஜம்.
ஆக மன்னிக்கும் குணமும் கூட இருந்தே குழிபறிக்கும் நயவஞ்சக குணமும் மனிதன் மனதைவிட்டு அகல்வதே நல்ல விஷயமாகும்!