ரகசியம் காக்கப்படும் சமையல் குறிப்புக்கு சொந்தக்காரர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்...!

ஹர்லாண்ட் சாண்பர்ஸ்.
ஹர்லாண்ட் சாண்பர்ஸ்.

ந்து வயதில் தந்தையை இழந்தார்.16 வயதில் பாடசாலை இடை விலகினார்.17 வயதில் ஏற்கனவே செய்த நான்கு வேலைகளையும் இழந்தார்.18 வயதில் திருமணம் முடித்தார்.18 இலிருந்து 22  வரை வீதி ஒப்பந்தக்காரராக தோல்வியடைந்தார். இராணுவத்தில் இணைந்து இடை நிறுத்தப்பட்டார். சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டார். காப்புறுதி விற்பனையாளராக மீண்டும் தோல்வி துரத்தியது.

19 வயதில் திருமணமாகி தந்தையானார். 20 வயதில் மனைவி இவரைப் பிரிந்து பெண் குழந்தையுடன் சென்று விட்டார். சிறு உணவகம் ஒன்றில் சமையலாளராகவும் பாத்திரம் கழுவுபவராகவும் வேலை செய்தார்.

சொந்த மகளைக் கடத்துவதன் மூலம் மனைவி மீண்டும் தன்னிடம் வருவார் என எண்ணி முயற்சி செய்து தோல்வியடைந்தார். 65 வயதில் ஓய்வு பெற்றார். ஓய்வூதியமாக 105 டாலர்கள் மாத்திரமே அரசிடமிருந்து கிடைத்தது. அரசு இவ்வளவு குறைவாக தனக்கு அளித்ததை நினைத்து மனம் உடைந்து போனார்.

ஒன்றுமே சரியாக வரவில்லை என்று தற்கொலை முடிவுக்குச் சென்றார். மரம் ஒன்றின் அடியிலிருந்து தற்கொலை கடிதம் எழுதும் போதுதான்,  தன் வாழ்வில் தான் எதையும் சாதிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டார். மற்றவர்களை விட தான் எதிலாவது முக்கியத்துவம் பெற்று இருக்கிறோமா? என்ற சிந்தனை செய்து மற்றவர்களை விடத் தான் எதனை "சிறப்பாகச் செய்கிறேன் "என்பதைக் கண்டறிந்தார். அதுதான் சுவையான வறுத்த கோழி இறைச்சி சமையல் செய்வது எனும் திறமை.

87 டாலர்கள்  காசோலையை  கடனாக வாங்கி  கென்ட்டாகி நகரில் ஒரு ரெஸ்ட்ராண்ட் துவங்கி பொறித்த சிக்கனை தன் கைவண்ணத்தில் செய்து விற்றார். அது வாடிக்கையாளர்களை கவரவே  12 ஆண்டுகளில்  அது 600 கிளைகளாக மாறியது .அது தான் KFC (கென்டக்கி பிரைடு சிக்கன்) எனும் நிறுவனம். 65வயதில் தற்கொலைக்கு முயன்று 88ஆவது வயதில் KFC நிறுவன ஸ்தாபகரானாகி உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக மாறினார்.  அவர்தான்1890-ல் அமெரிக்காவில் பிறந்த  ஹர்லாண்ட் சாண்பர்ஸ். 

1980 ஆம் ஆண்டு சாண்டர்ஸ் தனது 90 வயதில், கடுமையான லுகேமியா நோயால் இறந்தார். அவரது இறப்பு நேரத்தில், உலகம் முழுவதும் 6000 கேஎப்சி உணவகங்களும், ஆண்டுதோறும் $ 2 பில்லியன் மதிப்பிற்கு விற்பனையும் இருந்தன. இன்று, மெக்டொனால்ஸ்க்குப் பிறகு இரண்டாவது பெரிய உணவகமாக கேஎப்சி உள்ளது,

அவர் 1940 ஆம் ஆண்டு  பதினொரு மூலிகைப் பொருட்கள் மற்றும் மசாலா அடங்கிய “இரகசிய ரெசிபி”  முடிவு செய்தார். அதுதான் கே.எப் .சி  சிக்கனுக்கு தனிசுவையை தருகிறது. தற்போது உலகிலேயே மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் சமையல் குறிப்பு இவரின் குறிப்பு தான். குளிரூட்டப்பட்ட தனி அறையில் நான்கு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இந்த சமையல் குறிப்பை பாதுகாத்து வருகின்றனர்.

நம்பிக்கை, கனவு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு கேணல் சாண்டர்ஸ் வாழ்க்கை பயணம் ஒரு உதாரணம்.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா? 
ஹர்லாண்ட் சாண்பர்ஸ்.

இப்போதும் காலம் போய் விடவில்லை. உங்களது பார்வை தான் முக்கியமான விஷயம். எப்போதும் நீங்கள் விட்டுக் கொடுக்காமல் முயன்று கொண்டு இருக்க வேண்டும். உங்களை எது சாதனையாளனாக்குமோ அதைத் தெரிவு செய்யுங்கள். அதன் வழிசெல்லுங்கள் அதில் உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துங்கள்.

நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் செயல்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள், நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விருப்புடன் ஆர்வமாக செய்யுங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பதை ஒரு போதும் கை விடாதீர்கள் நீங்கள் நினைப்பதை சாதிப்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com