நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் என்பது உண்மையா?

Positive Thinking
Positive Thinking

நேர்மறை சிந்தனை என்பது நம் வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு நம்பிக்கையான கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தும் மனநிலையாகும். இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாகவே பார்க்கப்படுகிறது. இது நம் ஒட்டுமொத்த வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி நல்ல நிலையை அடைய வைக்கும் திறன் கொண்டது. நல்ல சிந்தனைகள் நம் உணர்வுகள், செயல்கள் போன்றவற்றை வடிவமைத்து, நல்ல விளைவுகளைக் கொடுக்கும்.

நாம் எப்போதும் நேர்மறையான மனநிலையில் இருக்கும்போது நம்முடைய திறமைகளை சமாளிக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இது நமது வளர்ச்சி மற்றும் புதிய விஷயங்களைத் தேடி கற்பதற்கான வாய்ப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது. குறிப்பாக நாம் தோல்வியடையும் விஷயங்களில் இருந்து கற்றுக்கொண்டு, தைரியமாக முன்னேறிச் சென்று வாழ்க்கையில் வெற்றி பெற பெரிதளவில் உதவுகிறது. 

இருப்பினும் பலருக்கு, நல்லதே நினைத்தால் நல்லதே நடக்குமா? என்பதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நல்லதே நினைத்து செயல்களைச் செய்யும்போது நாம் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், கெட்ட விஷயங்களில் நாம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதையும் நாம் ஓர் நல்ல விஷயமாகவே பார்க்கலாம். 

நாம் செய்யும் செயல்களை முற்றிலுமாக கட்டமைப்பது நமது சிந்தனைகள்தான். நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி பார்க்கிறீர்களோ அப்படிதான் அனைத்துமே மாறுகிறது. உங்களால் முடியும் என நினைத்தால், அதை செய்வதற்கான வழிகளைத் தேடுவீர்கள். இதுவே முடியாது என நினைத்தால், எதுவும் செய்யாமல் உங்கள் வாழ்க்கை ஒரே இடத்திலேயே இருக்கும். நீங்கள் தைரியமாக முடியும் என நினைத்து முயற்சிக்கும் விஷயங்களில் இருந்து மதிப்புமிக்க பாடங்கள் கிடைக்கும். ஆனால் முடியாது என்று விட்டுக் கொடுத்துவிட்டால், எதையுமே நீங்கள் கற்றுக் கொள்ள மாட்டீர்கள். 

இதையும் படியுங்கள்:
தோல்விக்கான காரணமும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும்!
Positive Thinking

எனவே வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறை சிந்தனை மிக மிக முக்கியம். நல்லது நினைத்தால் நல்லது நடக்கிறதோ இல்லையோ? நீங்கள் எப்போதும் நல்ல உணர்வுடன் நிம்மதியாக இருக்க முடியும். இது உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே மகிழ்ச்சியாக அனுபவிக்க உதவும். 

எனவே நேர்மறை சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு, வாழ்க்கையை தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com