வெற்றி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கியமான இலக்காகும். பணம், புகழ், மரியாதை, திருப்தி போன்ற பல்வேறு வடிவங்களில் வெற்றி வரையறுக்கப்படலாம். ஆனால், வெற்றியை அடைய என்ன செய்ய வேண்டும்? என்பது பலருக்கு தெரிவதில்லை. தத்துவவாதிகள், மனோ தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என பலரும் வெற்றியின் ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளனர். அதுவும் இன்றைய காலகட்டத்தில் வெற்றியைப் பற்றிய ஆய்வுகள் அறிவியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பதிவில் வெற்றியின் அறிவியல் பற்றிய சில முக்கியமான கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.
வெற்றி என்றால் என்ன?
வெற்றி என்பது ஒரு பரவலான கருத்து. ஒவ்வொரு நபருக்கும் வெற்றியின் வரையறை வேறுபட்டிருக்கும். ஒருவருக்கு பணக்காரராக இருப்பது வெற்றியாக இருக்கலாம், மற்றவர்களுக்கு ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதை வெற்றியாக இருக்கலாம். ஆனால், பொதுவாக வெற்றி என்பது ஒரு நபர் தனது வாழ்க்கையில் நிர்ணயத்த இலக்கை அடைவது என வரையறுக்கப்படுகிறது.
வெற்றியின் அறிவியல் ரகசியம்:
வெற்றியின் அறிவில் என்பது வெற்றியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இந்தத் துறையில் மனோதத்துவம், நரம்பியல் சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெற்றியை அடைய குணங்கள், திறன்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய ஆய்வுகள் பல ஆண்டு காலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதில் வெற்றியை அடைய உதவும் குணங்கள் என்னென்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெற்றியை அடைய கடின உழைப்பு என்பது மிகவும் முக்கியமானது. வெற்றி என்பது ஒரே இரவில் கிடைத்துவிடாது. அதை அடைய தொடர்ச்சியான முயற்சிகள் தேவை.
தன்னம்பிக்கை என்பது வெற்றியின் முக்கியமான அடிப்படை. தன்னை நம்பும் ஒருவர் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார் என்பதால், அவரால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
வெற்றிக்கு நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம். நேர்மறை எண்ணங்கள் வெற்றியை நோக்கி ஒருவரை தள்ளும். எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாழ்ச்சி அடையச்செய்யும் என்பதால், எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, வெற்றியை அடைய தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மை அவசியம். இத்துடன் மற்றவர்களுடன் நல்ல தொடர்புகொள்ளும் திறன் வெற்றியை அடைய மிகவும் முக்கியமானது.
வெற்றியை அடைய தேவையான பழக்க வழக்கங்கள்:
ஒருவர் வெற்றியை அடைய பல நல்ல பழக்கவழக்கங்கள் தேவை. அவற்றில் சில முக்கியமான பழக்கவழக்கங்கள் என்று பார்க்கும்போது, முதலில் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உடற்பயிற்சி, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி வெற்றி அடைய உதவும்.
அடுத்ததாக சரியான உணவை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும். சரியான உணவு ஆரோக்கியத்தை மேம்படுத்தி வெற்றியடைய உதவும். தினசரி போதுமான தூக்கம் பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் முறையாக தூங்கினால் மட்டுமே உங்களால் சிறப்பாக செயல்பட முடியும். தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஒருவரின் அறிவை விரிவுபடுத்தி வெற்றியை அடைய உதவும்.
வெற்றி என்பதை ஒரு இலக்காக பார்க்காமல் அது ஒரு பயணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வெற்றியை அடைய தொடர்ச்சியான விடாமுயற்சிகள் தேவை. மேற்கூறிய குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நீங்கள் வெற்றியை அடைய உதவும் என்றாலும், வெற்றி என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த வழியில் வெற்றியை வரையறுத்து அதை அடைய பாடுபட வேண்டும்.