
நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நமக்கு அவை தொிந்திருந்தாலும், சில சமயங்களில் நாம் அதை பிடிக்காமல் போவதும் உண்டு. பொதுவாகவே வாழ்வில் ஒரு சில நிலைப் பாடுகளை கடைபிடிக்கும் நிலையில் அதில் எத்தனை சோதனைகள் தலைதூக்கினாலும் அதிலிருந்து வழுவாமல் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். என்னால் முடியாது அவ்வளவுதான். எனக்கு அது கிடைக்காது! என்ற எதிா்மறை சிந்தனையே நமக்கு பலவகைகளில் அல்லல் கொடுக்கும்.
சிலர் வேண்டுமென்றே நம்மை உசுப்பேத்திவிடுவாா்கள். நம்மிடம் நல்லவர்கள் போல பழகி நயவஞ்சகமான எண்ணத்துடன் நமது வளா்ச்சிக்கு தடையாய் இருப்பாா்கள். அதுசமயம் நமது நிலைபாட்டிலிருந்து கொஞ்சம் கூட மாற்றம் வரக்கூடாது.
அவர்களது நிலைபாட்டால் நாம் துவளவே கூடாது. முயற்சி செய்யவேண்டும், அதற்கு நமது பழக்க வழக்கங்களும், கொண்ட கொள்கையும், மாறக்கூடாது. நமது வாழ்வில் சொந்தம் என்று பலர் இருக்கலாம், அதுவல்ல, அதைவிட மேலானது ஒன்று உள்ளது
நமது நற்செயல்களே நமக்கு அழியாத சொத்து. எத்தனை இடர்பாடு வந்தாலும் அந்த நெறிமுறைகளில் இருந்து மாறவே கூடாது.
அப்போது பாரதியாா் பாடல்கள் நினைவுக்கு வருகிறதே!
"எண்ணிய முடித்தல்வேண்டும் நல்லனவே எண்ணல் வேண்டும்"
நாம் நல்லதை நினைக்கும்போது இறவன் நமக்கு துணையாய் இருப்பான். அதேநேரம் கெட்டதை நினைக்கும்போதும் துணையிருப்பான் அந்த துணைக்கு அர்த்தமே வேறாகும்.
அந்த காலத்திய பழமொழி ஒன்று உண்டு "களவும் கற்றுமற" அதாவது களவு என்பது திருடுதல், கத்து என்பது பொய்சொல்லுதல், இவையிரண்டும் குறுக்கே வந்து போனாலும் நாம் அதை கடைபிடிக்காமல் வாழவேண்டும். ஒழுக்கம் தவறாமல் நோ்மைக்கு பங்கம் வராமல் வாழவேண்டும்.
நம் வாழ்வின் வெற்றியானது நம் பிறப்பில் மட்டுமல்ல படிப்பிலோ பணத்திலோ, அறிவாற்றலிலோ, இருந்து கிடைப்பதைவிட மற்றவர்களிடம் நாம் எவ்வளவு ஒழுக்கமாய் இருக்கிறோம், என்பதிலும் நாம் நோ்மையாய் நடந்து கொள்கிறோம் என்பதில் மட்டுமே உள்ளது. என்பதை நாம் மறக்கவே கூடாது.
நம்மை அறிந்தவர் சிலர். அறியாதவர்கள் பலர். ஆக அனைவரும் நம்மை அறிந்துகொள்ளும் வகையில் நல்ல சிந்தனையோடு வாழ்வோம்.
இறைவன் துணையோடு நல்ல வாழ்க்கையை வாழ்வோம்!