நாம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் அந்தஸ்து என்று நினைப்பது முட்டாள்தனம். மாவீரன் அலெக்சாண்டர் பல சாம்ராஜ்ஜியங்கள் கைப்பற்றிய பிறகு சொந்த நாடு திரும்பும்போது அவரை தீவிர நோய் தாக்கியது. தன் முடிவு நெருங்கியதை உணர்ந்த அவர் தன் தளபதியை அழைத்து "என் 3 ஆசைகளை தவறாமல் நிறைவேஏற்றீங்கள்'" என்றார். என் சவப்பெட்டியை மருத்துவர்கள் தான் சுமக்கவேண்டும். இறுதி ஊர்வலம் செல்லும் பாதையில் முத்தும் மணியும், நான் வெற்றி பெற்ற நாடுகளின் நவரத்தினங்கள் தூவப்பட வேண்டும். என்னுடைய இரண்டு கைகளையும் வெளியே ஊசலாடும்படி வைத்துதான் என் சவப்பெட்டி மூடப்பட வேண்டும் என விரிவாகக் கூறினார்.
தளபதிகள் இதற்கான காரணத்தைக் கேட்க அவன் "வாழ்வில் கற்றுக் கொண்ட மூன்று பாடங்களை மக்களுக்குச் சொல்லி விட்டுப்போக விரும்புகிறேன். மாமன்னாக இருந்தாலும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாது. என்பதை அறிவிக்கவே என் சவப்பெட்டியை அவர்கள் சுமக்க வேண்டும். ஒரு குன்றிமணி கூட என்னுடன் வரப் போவதில்லை என்பதை தெரிவிக்கவே வழயெங்கும் நவரத்னங்களை இறைக்கச் சொன்னேன். பூமிக்கு வந்தபோது ஒன்றும் அற்றவனாகவே வந்தேன். போகும்போது ஒன்றும் அற்றவனாகவே போகிறேன் என்பதை உணர்த்த சவப்பெட்டிக்கு வெளியே கைகளை வைக்கப் சொன்னேன்" என்றார்.
இதுதான் வாழ்வின் உண்மை. இதில் எது அந்தஸ்து. உங்கள் பள்ளி நண்பர்கள் ஒரு கட்டத்திற்குப் பின் நண்பர்களாக இல்லாமல் வேறு வேறு பாதை போகலாம். நண்பராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும் அவரை சமமாக நினைப்பதே ஓரு பேருதவி போல் எண்ணுவது ஒரு விதமான நோய். அந்த அகங்காரத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யத் தோன்றும். பொய் சொல்ல, ஏமாற்ற ஏன் குற்றம் கூட செய்யத் தோன்றும். விதை எப்படியோ அப்படித்தான் மரங்கள் வளர்கின்றன.
ஆலமரமும், தென்னை மரமும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று நிரூபிக்க முயல்வது இல்லை. பனையும், மாமரமும் யாருக்குத் கிளை அதிகம் என்று சண்டையிடுவதில்லை. இந்த நான்கு மரங்களும் ஒரு தோட்டத்தில் இருக்கலாம். ஆனால் ஒரே மட்டத்தில் இருக்க முடியாது மனிதர்களும் அப்படித்தான். அவரவர் திறமைக்கேற்ற வளர்ச்சி அடைகிறார்கள்
அதிகாரம், பதவி, செல்வம் எல்லாமே திறமையினால் வந்திருக்கலாம். அதை எதற்கு உபயோகப்படுத்த வேண்டும். எதற்கு உபயோகப்படுத்தக் கூடாது என்பதை புரிந்து கொள்ளும் திறமை அவனுக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.