2024-ல் வெற்றி பெறத் தேவையான திறன்கள்… எதிர்காலத்திற்கும் உதவும்! 

The Skills You Need to Succeed in 2024
The Skills You Need to Succeed in 2024
Published on

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் வேலை உலகம் தொடர்ந்து மாறி வருகிறது. இன்று நமக்குத் தேவைப்படும் திறன்கள் நாளை தேவைப்படாமல் போகலாம். இத்தகைய போட்டிகள் நிறைந்த உலகில் நாம் வெற்றி பெற தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப நம் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் 2024 மற்றும் அதற்குப் பிந்தை ஆண்டுகளில் நமக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய சில முக்கிய திறன்களைப் பற்றி பார்க்கலாம். 

டிஜிட்டல் திறன்கள்: டிஜிட்டல் திறன்கள் என்பது கணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தி தகவல்களை அணுகவும், செயலாக்கவும், உருவாக்கவும், தொடர்பு கொள்ளவும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதாகும். இதில் மென்பொருள் பயன்பாடுகள் மின்னஞ்சல்கள் இணையத் தேடல் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது போன்றவை அடங்கும். இன்றைய காலத்தில் டிஜிட்டல் திறன்கள் அனைத்து தொழில்களுக்கும் அவசியம். ஏனெனில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு தொழில்நுட்பதையே தற்போது நம்பியுள்ளனர். 

பிரச்சினைகளை தீர்க்கும் திறன்: பிரச்சனை தீர்க்கும் திறன் என்பது சிக்கல்களை அடையாளம் கண்டு, பகுப்பாய்வு செய்து தீர்வுகளை உருவாக்கும் திறனாகும். இது சிக்கலான தகவல்களைப் புரிந்து கொள்வது, பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வருவது மற்றும் முடிவுகளை எடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரச்சனை தீர்க்கும் திறன் அனைத்து தொழில்களுக்கும் முக்கியமானது. ஏனெனில் ஊழியர்கள் தங்கள் வேலையில் சவால்களை எதிர்கொள்ளும்போது அதைப் பயன்படுத்த வேண்டும். 

விமர்சன சிந்தனைத் திறன்: விமர்சன சிந்தனை திறன் என்பது தகவல்களை மதிப்பீடு செய்து முடிவுகளை சிறப்பாக எடுக்கும் திறனாகும். இதில், இருக்கும் தகவல்களின் ஆதாரத்தை மதிப்பீடு செய்து, அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து சரியான முடிவுகளை எடுப்பது போன்றவை அடங்கும். இன்றைய காலத்தில் விமர்சன சிந்தனை திறன் எல்லா தொழில்களுக்கும் முக்கியமானது. ஏனெனில் ஊழியர்கள் தகவல்களை மதிப்பீடு செய்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். 

தொடர்புகொள்ளும் திறன்: தொடர்பு திறன் என்பது நமது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் வாய்வழி அல்லது எழுத்து மூலமாக தெரிவிக்கும் திறனாகும். திறம்பட பேசுவது, எழுதுவது, கேட்பது மற்றும் படிப்பது ஆகியவை அடங்கும். தொடர்பு திறன் அனைத்து தொழில்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். சக ஊழியர்கள் மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ள இது உதவும். இதை ஒரு எவர்கிரீன் திறன் எனலாம். 

இதையும் படியுங்கள்:
Circle to Search: இனி குரோமிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்! 
The Skills You Need to Succeed in 2024

படைப்பாற்றல்: படைப்பாற்றல் திறன் என்பது புதிய யோசனைகளை உருவாக்கும் திறனாகும். இரு சிக்கல்களை புதிய வழிகளில் சிந்தித்து புதுமையான தீர்வுகளைக் கொண்டுவர உதவும். குறிப்பாக, இதன் மூலமாக புதிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். இதன் காரணமாகவே எல்லா தொழிலுக்கும் படைப்பாற்றல் மிகவும் முக்கியமானது. ஏனெனில் போட்டிகளுக்கு மத்தியில் நாம் சற்று வித்தியாசமாக இருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றியடைய முடியும். 

எதிர்காலத்தில் வெற்றி பெற இத்தகைய திறன்களில் முதலீடு செய்யுங்கள். தொடர்ந்து கற்றுக் கொள்வதன் மூலம் புதிய திறன்களை வளர்த்துக் கொண்டு மாறிவரும் வேலை உலகில் நீங்கள் முன்னிலையில் இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com