
வாழும் வாழ்க்கை நமக்கானது மட்டுமல்ல, பிறரின் நன்மைக்காகவும் தான் என்ற வாழ்க்கை தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்தான் அகிலம் போற்றும் அன்னை தெரசா அவர்கள். கருணை, இரக்கம், பரிவு, அன்பு இதுதான் என் வாழ்க்கை என்று வாழ்ந்த தியாகப் பெண்மணி நம் அன்னை தெரசா அவர்கள். பிறரின் நன்மைக்காக காலம் முழுக்க ஓடி உழைத்த வீரமங்கை. வீரமங்கை என்றால் வால் எடுத்து சண்டை போடும் வேலுநாச்சியார் அல்ல, தோள் கொடுத்து அரவணைக்கும் மற்றொரு வேலு நாச்சியார். அன்னை தெரசா கூறிய அற்புத அன்பு பொன்மொழிகள் இதோ,
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்!
உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட, உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரையாவது சொல்ல வை.
உன் மீது அன்பு செலுத்துபவர்களை நேசி,உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி.
வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்.
சிறிய விஷயத்திலும் உண்மையாக இருங்கள் ஏனெனில், அதில் தான் உங்கள் வலிமை இருக்கிறது.
அன்பிற்கு தடை என்றால் அந்த வேலிகளை எப்போதும் தாண்டவே விரும்புவேன்.
நீங்கள் மற்றவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களிடம் ஒருபோதும் நேரம் இருக்காது.
புன்னகையே அன்பின் சின்னம். அதுவே நாம் பிறருக்கு கொடுக்கும் அழகிய பரிசு.
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள், அது மட்டுமே அதிக வட்டியுடன் திரும்பி கிடைக்கும்.
அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை, அதை சொற்களால் விளக்கவும் முடியாது, ஆனால் செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு.
இந்த உலகில் நாம் நம் கண் முன் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் எப்படி அன்பை பெறுவது.
உன் கண்களில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களையும் நீ நேசிப்பாய், அதேபோல் பேச்சில் இனிமை இருந்தால் எல்லா மனிதர்களும் உன்னை நேசிப்பார்.
குற்றம் காணத்தொடங்கினால், அன்பு செய்ய நேரம் இருக்காது.
உதவும் கரங்கள், கடவுளை நினைத்து பிராத்திக்கும் உதடுகளைவிட சிறந்தது.
அன்புதான் உன் பலவீனம் என்றால், இவ்வுலகில் அதிக வலிமை படைத்த பலசாலி நீ மட்டும்தான்.