சிலந்தி உணர்த்திய உண்மை பாடம்!

The spider started building a nest...
The spider....
Published on

சிலந்தி தன் வாய்ப் பசையால் உருவாகும் நூலினைக் கொண்டு தன் கூட்டைக் கட்டும். மலைக்குகை ஒன்றின் முகட்டில் சிலந்தி கூடு கட்டத் தொடங்கியது. பலமுறை முயன்றும் கூட்டைக் கட்ட முடியாமல் கீழே விழுந்தது. ஆனாலும் தன் முயற்சியை கைவிடுவதாய் இல்லை.

ஆறு முறை கீழே விழுந்தது. ஏழாவது முறையும் முயற்சி செய்தது. இம்முறை கீழே விழாமல் வலையைப் பின்னி முடித்தது. சிலந்தி எடுத்த எடுப்பிலே வலை பின்னி விடவில்லை.

சில தடவை கீழே விழுந்து பின்பு மீண்டும் எழுந்து இறுதியில் வலை பின்னியது. முயற்சிதான் வலையை அமைக்கும்படி செய்தது. முயற்சி' செய்யாமல் இருந்திருந்தால் வலையையும் பின்னி இருக்க முடியாது. 

இதைக் காட்சிப் பொருளாகக் கண்டுகொண்டிருந்தார்  ஸ்காட்லாந்து நாட்டு மன்னர் ராபர்ட் புருசு. தன் நாட்டை இழந்த அவர் தன் படைகளைத் திரட்டி ஆறுமுறை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார்.

ஆறு முறையும் தோற்றார். மனம் தளர்ந்தார். சிலந்தி வலை பின்னிய குகையிலே தங்கியிருந்த அவர்  சிந்திக்கத் தொடங்கினார். அங்கே கண்ட காட்சி அவருக்கு மன எழுச்சியை உண்டாக்கியது.

இந்த சிலந்தி போல நாமும் ஆறு முறை தோற்றோம். ஏழாவது முறையாகப் படையெடுத்துச் சென்றால் இங்கிலாந்தைக் கைப்பற்ற முடியும் என்று எண்ணினார். இங்கிலாந்தின் மீது புருசு மன்னன் ஏழாவது முறையாகப் படையெடுத்தார். வெற்றியும் பெற்றார்!

இதையும் படியுங்கள்:
லட்சியத்தின் வெற்றிப்படிகள் எது தெரியுமா?
The spider started building a nest...

உள்ளத் திண்மையும் இடைவிடாத முயற்சியும் வெற்றியைத் தரும் என்ற உண்மையை ராபர்ட் புரூசின் வாழ்க்கையிலிருந்து அறிய முடிகிறது. இந்த உண்மை நிலையை அறிந்த பின்பு இதே வழியைப் பின்பற்றினால் வெற்றி பெறுவது உறுதி.

இவரைப் போன்ற பலரது வாழ்க்கைச் சம்பவங்கள் வெற்றியின் அடிப்படைக்கு மூல காரணமாக அமைந்திருக்கின்றன என்று தெளிவாக அறிந்து கொள்ள முடியும். வெற்றி பெற்றவர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும், முயற்சி செய்யாமல் இருந்ததே கிடையாது என்ற மெய்யான உண்மையைக் காணமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com