நீங்கள் ஆசைப்பட்ட எத்தனையோ விஷயங்கள் இழந்திருக்கலாம். ஒரு காலக்கட்டத்தில் இன்ஜினியர்களுக்கு வேலை கிடைத்தது. உடனே அதுதான் உலகின் பத்திரமான பந்தயம் என்று பிள்ளைகளை பகடைக்காய்களாக உருட்ட ஆரம்பித்தார்கள். ஆயிரம் பேர் செய்வதைத்தான் செய்வார்கள். சுயமாக எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். ராத்திரி பகலாக இதையே சொல்லிச் சொல்லி தங்கள் பிள்ளைகளின் மனத்தை மந்தமாக்கி வைத்திருப்பார்கள். எந்த துறையாக இருந்தாலும் அதை ஆசைப்பட்டு. தேர்ந்தெடுத்தால் வரவேற்கலாம். பிழைப்புக்காக அந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை வீணாகிவிடும்.
இது தனக்கு தேவையான என்று யோசிக்காமல் எல்லோரும் குதிக்கும் மலைமுகட்டிலிருந்து நீங்களும் குதிப்பதற்காகவா இத்தனை படிகள் ஏறி வந்தீர்கள்?.
ஒரு ஜோசியர் அரசனுக்கு கண்டம் என்று சொல்லி விட்டான். உடனே அரசன் எந்த பீரங்கி யாலும் துளைக்க முடியாதபடி கோட்டைச் சுவர்களை நான்கு அடி தடிமனுக்குக் கட்டிக்கொண்டான். கோட்டையைச் சுற்றி அகழியை ஆழமாக்கினான். ஒன்றிரண்டு ஜன்னல் தவிர மற்றதை அடைத்து விட்டான். 100 ஆயுதம் ஏந்திய சிப்பாய்களை கதவருகிலையே நிறுத்தினான்.
ஒரு தடவை தற்செயலாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது, அங்கிருந்த பிச்சைக்காரன் அரசனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். கோபம் கொண்ட அரசன் அவனை இழுத்து வரச் சொன்னார். அவனிடம் எதற்காக நீ சிரித்தாய். பதில் சொல். இல்லையேல் உன் தலை துண்டிக்கப்படும் என்றான்.
பிச்சைக்காரன் "ஒன்றிரண்டு இன்னல்களை மட்டும் ஏன் திறந்து வைத்திருக்கிறாய். அதையும் அடைத்து கதவை பூட்டினால் ஆபத்து உள்ளே வர முடியாதே" என்றான். அரசன் "முட்டாளே எல்லாவற்றையும் அடைத்தால் நான் மூச்சு முட்டி இறந்து விடுவேன்" என்றான். அதற்கு பிச்சைக்காரன் இப்போது மட்டும் என்ன நீ வசிப்பது கல்லறையில்தான். இந்த கல்லறைக்குள் காவல் இருக்கிறது. கதவு இருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்" என்று சிரித்தான் பிச்சைக்காரன்.
புதிதாக எதையும் முயற்சித்துப் பார்க்கும் தைரியம் இல்லை என்றால் நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? பாதுகாப்பான வாழ்க்கை என்று நம்மைச் சுற்றிச் சுவர்கள் எழுப்பினால் நம்மால் உயிர்ப்போடு வாழ முடியாது. அப்படி உயிரை புதைத்து விட்டு உடலை மட்டும் எதற்காக 60, எழுபது வருடங்களுக்கு இழுத்துக் கொண்டு அலைய வேண்டும்.
கரையை விட்டு விலக தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பல் செலுத்திக் கொண்டிருந்தால் எந்த ஊருக்கும் போய்ச் சேர முடியாது. கப்பல் தரை தட்டித்தான் போகும். நீங்கள் எதிர்பார்த்தபடி பக்கத்துக்கு பக்கம் திகைக்க வைக்கும் திருப்பங்கள் வந்தால்தானே ஒரு சஸ்பென்ஸ் கதையை பிரமாதம் என்று பாராட்டு வீரர்கள். ஆனால் வாழ்க்கையில் மட்டும் திருப்பங்கள் இவ்லாமல் சலிப்புடன் அமைத்துக்கொள்ள விரும்புகிறீர்களே ஏன்?. இளைஞனாக இருப்பதற்குரிய தகுதி வலுவான உடல் மட்டும் அல்ல. திடமான மனசும் கூட. எதிர்பாராததையும் துணிச்சலோடு ஏதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.