காலம் ஒரு பிளாட்டினம்!

time
Time
Published on

விலையுயர்ந்த உலோகம் தங்கமா? ப்ளாட்டினமா? ப்ளாட்டினம் தான். அப்புறம் காலத்தை தங்கத்துடன் ஏன் ஒப்பிட வேண்டும். காலம் பிளாட்டினம் போன்றது என்று சொல்லலாமே. ஒரு நொடியின் அருமை விண்வெளி வீரருக்கு தான் தெரியும்‌. ஒரு நிமிடத்தின் பெருமை விளையாட்டு வீரர்கள் அறிவார்கள். ஒரு நாளின் அருமை உழைப்பாளிக்குத் தெரியும்‌. நாட்களின் சுவடுகளான காலம்தான் எல்லாவற்றையும் கல்வெட்டுக்கள் ஆக்குகிறது. காலம் எப்போது எதை நிகழ்த்தும் என்பதை காலம் மட்டுமே அறியும்‌.

சாதாரண தினத்தை வரலாற்று ஆக்குவது காலத்தின் கையில் தான் உள்ளது. ஆகஸ்டு 15 ம் தேதியை இந்தியாவும், செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவும் மறக்காமல் வைத்தது காலம் தான். இந்திய வீரப்பெண்மணி கல்பனா சாவ்லாவுடன் 7 பேர், வெற்றிப் பயணம் முடித்து பூமியை நோக்கி திரும்பவும் புறப்பட்டு, மண்ணைத் தொடுவதற்குள் அந்த மாயம் நிகழ்ந்தது. வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளி வெறும் 16 நிமிடம் தான். 16 நாட்களாக இரண்டாவது வெற்றிக்கான பயணம்.

மணிக்கு 20,000கி.மீ கொலம்பியா விண்வெளி ஓடம் இறங்க வேண்டிய ஃப்ளோரிடா ஜான் கென்னடி விண்வெளி மையம். பூமியிலிருந்து சரியாக ஒரு லட்சத்து ஏழாயிரம் அடி தூரம், கனவுகள் நிறைவேற வேண்டிய தருணம் வந்து விட்டது. கைகளில் பூங்கொத்து, முகத்தில் புன்சிரிப்புகளுடன் வரவேற்க கூட்டம். ஆனால், 16 நிமிட இடைவெளியில் எல்லாம் முடிந்து போயிற்று. சுக்கு நூறாய் மனித உயிர்கள் காற்றை ஊடுருவி கரைந்து போயின. கல்பனா வான்வெளியில் கனவுகளை உடைத்து காற்றோடு கலந்து போனார். உலகம் தனது கல்வெட்டில் தானே எழுதிக் கொண்டது.

சாதனையாளர்கள் சாவதில்லை. மரங்கள் அழிந்தாலும் விதைகளைக் கொடுத்து விட்டுதான் அழிகின்றன. விதைகள் மரமாக எழும்‌. கல்பனா சாவ்லா கடைசி நிமிடத்தில் சொன்ன வார்த்தைகள். "கனவு காணுங்கள். திட்டமிடுங்கள். செயல்படுத்துங்கள்." விபத்தின் கொடூரம் நொடியில் நேரிடும். நொடியும் நிமிடமும் வாழ்க்கையை மாற்றும். வாழ்க்கையைப் புரட்டிப் போடும்‌ திசையை மாற்றும். அந்த நிமிடத்தை பிளாட்டினம் ஆகக் கருதுபவன் நினைத்த வாழ்க்கையை சாத்தியமாக்குவான்.

இதையும் படியுங்கள்:
அன்புக்கும் உண்டு அளவு: அதிகமாக விதைக்காதீர்... அறுவடை செய்வது கடினம்!
time

நேரத்தை வாழ்க்கையில் கடைபிடிப்பவன்தான் உன்னத சாதனைகள் புரிகிறான்‌. நிமிடத்திற்கு மரியாதை செலுத்தாமல், நாட்களுக்குத் தலைவணங்காமல் யாரும் சாதனை நிகழ்த்தியதாக சரித்திரமில்லை‌. உருவில் சின்ன சிலந்தி கூட பகலெல்லாம் இரை தேடி தனது வலையை இரவு முழுவதும் பின்னணிக் கொண்டே இருக்கிறது.

ஆனால், மனிதனோ இரவு முழுவதும் உறங்கிக் கொண்டே இருக்கிறான்‌. அஞ்சல் செய்ய சட்டைப்பையில் வைத்துக் கொண்டு அடுத்த வாரம் தான் அஞ்சல் செய்கின்றான். சாதனையாளன் நொடிகளை மட்டும் திட்டமிடுவதில்ல. நொடிக்குள் ஒலிக்கும் நேரத்திற்குள் திட்டமிடுகிறார். திட்டமிடுகிறவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

தினசரி நீங்கள் ஏறும் பேருந்தின் நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்‌. அதற்கு ஏற்றார் போல் உங்கள் பணிகளை மாற்றியமையுங்கள்‌. ஒவ்வொரு செயலுக்கும் நேரம் முக்கியம். நேரத்தை வகைப்படுத்துங்கள். நேரம் சரியாகச் செல்கிறது. நாம் தான் நேரத்தை குறை சொல்கிறோம். நேரத்தை திட்டமிடுவதை தவிர்த்து, நேரத்தோடு உங்களை நேர் செய்யுங்கள். உங்கள் நேரம் உங்கள் கையில். விரயமாக்குவதை விட்டு விட்டு நேரத்தை நேர் செய்யுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com