நாவிலிருந்து புறப்படும் வார்த்தைக்கு அதிக வலிமை உண்டு!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

வாக்குக்கு வலிமை உண்டு என்று கூறுவார்கள். அதாவது நாம் பேசும் தேர்ச்சிக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. நாம் என்ன பேசுகிறோமோ அதுதான் நமக்கு நல்லதையும் தரும் தீமையையும் தரும் என்பதை நாம் பல தருணங்களில் உணர்ந்து இருப்போம். நான் எந்த வார்த்தை பேசினாலும் மிக உன்னிப்பாக கவனித்து இதை நாம் பேசலாமா வேண்டாமா என யோசனை செய்து பேசினால் நமக்கு எப்பொழுதுமே நன்மைதான் கிடைக்கும். 

நம்மில் பலர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறோம் புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என நினைத்துக் கொண்டு எதிரிகள் மீது வார்த்தை பிரயோகம் செய்யும்பொழுது அது பூமராங் போல் நம்மையே திருப்பித் தாக்கும் அப்பொழுதுதான் யோசனை செய்வோம் ஆஹா நாம் வார்த்தை விட்டிருக்கக் கூடாது என்று.

நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது.

இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

அதாவது தீயினால் சுட்டப்புண் வெளியே வடு இருந்தாலும், உள்ளே ஆறிவிடும். ஆனால், நாவினால் பிறரைத் தீயச்சொல் கூறிச் சுடும் வடு என்றுமே ஆறாது.

பேச்சாற்றல் மனிதனுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு. மற்ற உயிர்களிடமிருந்து இந்தப் பேச்சாற்றல்தான் நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. மனிதனால் பேசாமல் வாழ முடியாது. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுத்தான் வடிவம் கொடுக்கிறது. பேச்சு என்பது மிகப்பெரிய கலை.

ஓவ்வொருவரின் நாவிருந்தும் புறப்படும் வார்த்தை மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம். சிலருக்கு மனதை உடைத்து எறியலாம். நம்பிக்கையை உடைத்து எறியலாம். ஆறாத வடுவை ஏற்படுத்தலாம். ஓருவரை சிந்தித்து வாழ வைக்கலாம். மற்றொருவரை சாகத் தூண்டலாம்.

ஓரு நொடிப் பொழுதில் நம்மை உயர்வு அடையவும் செய்யலாம், தாழ்வடையவும் செய்யலாம். அதே நேரத்தில் நாவிருந்து புறப்படும் வார்த்தை மற்றவருக்கு. மகிழ்ச்சியையும் ,தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும்.

மற்றும் அவர்கள் மத்தியில் வளர்ச்சிக்கான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பேச்சாயின் அவரின் பேச்சு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

இதையும் படியுங்கள்:
சொர்க்கப் பதவி பெற்றுத் தரும் விடங்கலிங்க தரிசனம்!
Motivation image

ஓருவர் படித்தவராய் இருந்தாலும் சரி, படிக்காதவராய் இருந்தாலும் சரி, பிறரைக் காயப்படுத்தாமல் பேச்சு அமைய வேண்டும்.

நாம் பேசும் ஓவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு. அத்தகைய ஆற்றலும், சக்தியும் வாய்ந்த பேச்சு நம்மிடம் இருந்து வெளிப்பட வேண்டும்.,

நமது பேச்சு பிறரை மகிழ்ச்சிப் படுத்துவதாகவும், எந்த வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும். ஓருவரிடம் பேசும்போது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிந்தித்து நிதானமாகப் பேச வேண்டும்.

வாழ்க்கையை நாம் விடும் வார்த்தைகள்தான் முடிவு செய்கிறது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டும் என்றால் நாம் வீசும் வார்த்தைகளில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com