பேசும் வார்த்தைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

லியோ டால்ஸ்டாய்...
லியோ டால்ஸ்டாய்...Image credit - pixabay
Published on

னித இனத்திற்கே ஏகபோக உரிமையான  பேச்சு வார்த்தைகள்தான் எத்தனை? எத்தனை? ஒவ்வொன்றும் ஒருவிதம்தான்.

 * பேசுகையில் உபயோகிக்கும் வார்த்தைகளை   யோசித்துப் பேசுவது நல்லதென பெரியோர்கள் மற்றும் சான்றோர்கள் கூறியுள்ளனர்.

* அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியை எப்போதுமே கூட்டும். இது எவ்வாறென ஒரு சிறு நிகழ்வு மூலம் தெரிந்து கொள்ளலாமா?

* இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவருக்கு எதிரே வந்த ஒரு பிச்சைக்காரர்,
அய்யா, ''ஏதாவது உதவி செய்யுங்கள். உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது'' என்று கூறினார்.
அச்சமயம், டால்ஸ்டாயிடம்  சோதனையாக ஒரு காசு கூட இல்லை.  ஆனாலும், பிச்சைக்காரரைப் பார்த்து மிகவும் கனிவான குரலில்,

"அன்பு சகோதரனே,'' உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே என்றார்''.
அதைக் கேட்ட பிச்சைக்காரர் அவர் மேல் கோபம் கொள்ளவும் இல்லை. தன் நிலையை எண்ணி நொந்து கொள்ளவும் இல்லை. அதற்கு மாறாக முக மலர்ச்சியோடு, "நன்றி ஐயா, தாங்கள் போய் வாருங்கள்" என்றார்.

அவரது முகப் பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய்,  "நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறீர்களே எதற்காக? என்று  வியப்பாகக் கேட்கையில்,

ஐயா, ''இதுநாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.
நீங்கள் ஒருவர்தான் என்னை பாசத்தோடு "சகோதரனே" என்று  அன்போடு அழைத்து பரிவாகப் பேசி இருக்கிறீர்கள்.
அந்த அன்பு ஒன்றே போதும். என் மீது காட்டிய
இரக்கம் ஒன்றே போதும். வேறு எந்த உதவிகளும் எனக்குத் தேவை இல்லை அய்யா"  என்று மனம் உருகிச்சொன்னார்.

* அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையைத் தரும்.  வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாகவும்,   மற்றவர்களின் துயரைப் போக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

* கனிவான வார்த்தைகள் உயிரைக் காக்கும்.

*கருணையான வார்த்தைகள், காலம் அறிந்து சொல்லும் வார்த்தைகள் துன்பத்தைத் தவிர்க்கும்.

* தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்.

* நகைச்சுவை வார்த்தைகள் மன இறுக்கத்தைத் தளர்த்தும்.

இதையும் படியுங்கள்:
சரியாகப் புரிந்து கொண்டால் போதும் எதையும் சாதிக்கலாம்!
லியோ டால்ஸ்டாய்...

* பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும்.

* பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும்.

* பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டி,
 மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.

* வார்த்தைகளால் சண்டையைத் தொடங்கவும், முடித்து வைக்கவும் முடியும். சில கசக்கும். சில இனிக்கும்.
சில வார்த்தைகள்  இருட்டைப்போக்கும். சில  மயில் இறகு போல் இதமாக வருடிவிடும்.

* ஆறறிவு படைத்த மனித இனத்திற்கே உரிமையான பேச்சின் வார்த்தைகளை கூடிய மட்டும் அளந்து பேசுவதோடு, நல்லதையே பேசுவது எந்நாளும் நலம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com