அறியாமைக்கும் அப்பாவித்தனத்திற்கும் நூலிழையே வித்தியாசம்!

ப்ளு ரிங்கட்  ஆக்டோபஸ்...
ப்ளு ரிங்கட் ஆக்டோபஸ்...

‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது’ என்று சொல்வார்கள். ஒரு விஷயத்தை பற்றி எதுவுமே தெரியாமல் தெரிந்தது போல செய்வது சில நேரங்களில் ஆபத்தில் முடிந்துவிடும். அறியாமைக்கும், அப்பாவித்தனத்திற்கும் நூலளவே வித்தியாசம் உள்ளது. எனவே நாம் எங்கு சென்றாலும் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.

2021ஆம் ஆண்டு கைலின் பிலிப்ஸ் என்னும் அமெரிக்க பெண் சுற்றுலாப்பயணி ஒருவர் பாலி தீவிற்கு அவருடைய நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். முதலில் எல்லாம் மகிழ்ச்சியாகவே சென்றது. கடலில் நண்பர்களுடன் விளையாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தான் கடலிலே விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு அழகான நீல நிறத்தில் குட்டி ஆக்டோபஸ்ஸை கைலின் பார்க்கிறார். அதை பார்த்த உடனேயே கையில் எடுத்து விளையாட வேண்டும் என்று ஆசை தோன்றுகிறது. அந்த குட்டி ஆக்டோபஸ்ஸை மெதுவாக நீரிலிருந்து எடுத்து கையில் வைத்து நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார். அதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டும் மகிழ்கிறார். சற்று நேரத்திற்கெல்லாம் கைலின் பதிவிட்ட வீடியோவிற்கு மில்லியன் கணக்கில் பார்வைகள் வருகிறது. இதுவரை கைலினின் பதிவுகளுக்கு இந்த அளவு பார்வைகள் கிடைத்ததில்லை. இதனால் ஆச்சர்யமடைந்த கைலின் வீடியோவிற்கு கீழே வந்த கமெண்ட்ஸை படித்துப் பார்க்கையில் அதிர்ச்சியடைகிறார்.

அதாவது சற்று முன் கைலின் தன்னுடைய கைகளில் தூக்கி கொஞ்சி விளையாடிய அந்த குட்டி ஆக்டோபஸ் தான் உலகிலேயே மிகவும் கொடிய விஷமுள்ள ஆக்டோபஸ் ஆகும். அந்த ஆக்டோபஸின் ஒரு கடி உயிரை ஒரு சில வினாடிகளில் பறித்துவிடுமாம்.

அப்படி கைலின் தன் கைகளில் வைத்து விளையாடி கொண்டிருந்த ஆக்டோபஸின் பெயர், ப்ளு ரிங்கட். இந்த ஆக்டோபஸின் கடி சில நேரங்களில் வலி இல்லாமல் கடித்தது கூட தெரியாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அதனால் சுவாச பிரச்சனையும், பக்கவாதமும் வரும்போது தான் அது கடித்துவிட்டது என்பதை அறிந்து கொள்ள முடியுமாம்.

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
ப்ளு ரிங்கட்  ஆக்டோபஸ்...

இத்தகைய விஷமுள்ள ஆக்டோபஸை தான் கைலின் எதுவும் அறியாமல் கையிலே தூக்கி விளையாடியுள்ளார். அந்த நாள் கண்டிப்பாக கைலினுக்கு அதிர்ஷ்டமான நாளாகவே இருந்திருக்க வேண்டும். இல்லையேல் இப்படியொரு ஆபத்திலிருந்து தப்பித்திருக்க முடியாது. இதனால் அவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.

ஆனால் இந்த சம்பவம் நமக்கெல்லாம் ஒரு மிகப் பெரிய பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. சில சமயங்களில் அறியாமையோடு செய்யும் காரியங்கள் ஆபத்தானதாக இருப்பது கூட தெரியாமல் போய்விடுகிறது. நமக்கு தெரியாத எந்த ஒரு விஷயத்திலுமே விளையாடுவது தவறாகும். இனி கடலுக்கு சென்றால், கால்களை மட்டும் நனைத்து விட்டு வருவது நல்லது. கடலில் ஓடுவதை பிடிப்பது போன்ற சாகசங்கள் செய்வது, ஆபத்தை விலைக்கொடுத்து வாங்குவதற்கு சமம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com