வாழ்க்கையில் இளமையில் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு!

ஆபிரகாம் லிங்கன் தன் மகனுடன்...
ஆபிரகாம் லிங்கன் தன் மகனுடன்...
Published on

வாழ்க்கையில் சிறு வயதிலேயே பள்ளி படிக்கும் காலத்திலேயே பல அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டிய வரும் .ஒவ்வொரு செயலும் நாம் செய்யும் பொழுது இதுதான் சரியானது. இதுதான் தவறானது என்று நமக்கு நாமே கற்றுக் கொண்டு கொள்ளத்தான் வாழ்க்கையின் அர்த்தமே தெரிய ஆரம்பிக்கும். படிப்பு மட்டுமல்ல படிப்புடன் பல விஷயங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியும்.

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினார்.

அவன் கற்றுக்கொள்ள வேண்டும் எனக்கு தெரியும். எல்லோரும் நேர்மையானவர்கள் அல்ல.

எல்லோரும் உண்மையானவர்களும் அல்ல.

ஆனால் ஒவ்வொரு யோக்கியனுக்கும் ஒரு தலைவன் உண்டு.

ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும் உண்மையான தலைவன் உண்டு என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பகைவனுக்கும் ஒரு நண்பன் உண்டு என்று கற்றுக் கற்றுக் கொடுங்கள்.

அதற்கு சிறிது காலம் ஆகும் என்று எனக்கு தெரியும்.

அவனாகவே சம்பாதித்து ஒரு டாலர் 5 பவனை விட உயர்ந்தது என்று சொல்லித் தாருங்கள்.

அவனுக்கு தோற்கவும் கற்றுக் கொடுங்கள். வெற்றியின் மகிழ்ச்சியையும் உணர்த்துங்கள்.

பொறாமையிலிருந்து அவனை விலக்கி வையுங்கள். அமைதியான சிரிப்பின் ரகசியத்தையும் கற்றுக் கொடுங்கள்.

இதையும் படியுங்கள்:
தனித்துவம் வாய்ந்த தக்காளி குருமா இப்படி செய்ததுண்டா?
ஆபிரகாம் லிங்கன் தன் மகனுடன்...

ஏமாற்றுவதை விட தோற்றுப் போவது எவ்வளவோ உயர்ந்தது என்பதை சொல்லிக் கொடுங்கள்.

கேட்டது அவ்வளவையும் உண்மை என்னும் துணியால் வடிகட்டி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

கண்ணீர் சிந்துவதில் வெட்கப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லிக் கொடுங்கள் என்று எழுதினார்.

இதில் எத்தனை உண்மைகள் இருக்கின்றன பார்த்தீர்களா? இவை அனைத்தும் ஒரு மாணவனாக இளம் வயதிலேயே தெரிந்து கொண்டால், எதிர்காலத்தில் அவன் வாழ்க்கையில் சுலபமாக சாதிப்பதற்கு அடித்தளமாக அமைந்துவிடும். இன்பம் துன்பம் சமம்தான் என்பதும் உண்மை பொய் என்ன என்றால் என்ன என்பதையும் அறிந்த கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com