நல்லவர் யார், கெட்டவர் யார் என்று கணிக்க இந்த 10 போதுமே!

motivation image
motivation imageImage credit - pixabay.com

ன்றைய உலகில் நல்லவர் யார், கெட்டவர் யார் என கணிப்பது சற்று கடினமாகத்தான் உள்ளது. காரணம் இன்றைய மனிதர்கள் கூறும் ஒரு பிரபலமான கருத்து “கெட்டவன கூட நம்பலாம்; ஆனா, நான் நல்லவன்னு சொல்றான் பாரு அவன மட்டும் நம்பவே கூடாது.” 

பெருவாரியான மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இது இயல்பான பண்பு என்றாலும் அந்தச் சமயத்தில் இதனால் பாதிக்கப்படும் நபர்களின் மனதில் தோன்றும் எண்ணமே இந்தக் கட்டுரையின் தலைப்பு.

ஒரு நல்ல மனிதனிடம் காணும்  பொதுவான பண்புகளைப் பற்றி நாம் இப்போது தெரிந்துகொள்வோம்.      

1. செயல்கள் மற்றும் நடத்தை:

மற்றவர்களிடம் கருணை, பரிதாபம் மற்றும் மரியாதை கொடுத்து பழகினால் ஒருவர் தூய்மையானவர் எனலாம். மாறாக, தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால், அல்லது சுயநல நடத்தையை  வெளிப்படுத்தினால் அதை வேறு விதமாக தான் பார்க்கவேண்டும்.

2. பரிதாபம் மற்றும் இரக்கம்:

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் தன் திறனை அவர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். பரிதாபத்தையும் இரக்கத்தையும் காட்டும் ஒரு நபர் பெரும்பாலும் நல்ல உள்ளம் கொண்டவராக கருதப்படுகிறார்.

3. நேர்மை:

நம்பகத்தன்மை முக்கியமானது. நேர்மையுடன் தொடர்ந்து செயல்படுபவர்கள் நல்ல மனிதர்களாக கருதப்படுவார்கள்.

4. நிலைத்தன்மை:

அவர்களின் நடத்தையில் நிலைத்தன்மையை பாருங்கள். பல்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாக நடந்து கொள்ளும் ஒருவர் மாறி மாறி பேசும்போது அவர்களின் நிலையற்றத்தன்மை குறித்து அவர்களிடமே கேள்விகளை கேட்டு, அவர் குறித்த புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம்.

5. நோக்கங்கள்:

செயல்களுக்குப் பின்னால் உள்ள அவர்களின் நோக்கங்களைக் கவனியுங்கள். நல்லவர்கள் பெரும்பாலும் நேர்மறையான நோக்கங்களைக் கொண்டிருப்பர், விளைவுகள் சில நேரங்களில் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை கடந்து போய்விடுவார்கள்.

6. மன்னிப்பு:

தவறுகள் மற்றும் மோதல்களை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். பிறர் செய்த தவறுகளை மன்னிக்கவும், தான் செய்யும் தவறுகளிருந்து கற்றுக்கொள்ளவும் விருப்பம் இருந்தால், அது நல்ல பழக்கத்திற்கு அறிகுறியாகும் 

7. தாராள மனப்பான்மை:

கருணை, தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமற்ற செயல்கள் அவர்களின் நேர்மறையான மனப் பக்குவத்திற்கு அடையாளமாக திகழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
சம்மர் சீசனில் மின் கட்டணத்தைக் குறைக்க இப்படி யோசித்துப் பாருங்க!
motivation image

8. எல்லைகளுக்கு மரியாதை:

தனிப்பட்ட எல்லைகளை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் எல்லைகளை மதிக்கும் ஒரு நபர் முதிர்ச்சியையும் பக்குவத்தையும் வெளிப்படுத்துகிறார்.

9. ஆதரவான நடத்தை:

தேவைப்படுபவர்களுக்கு அவர்கள் ஆதரவை வழங்குகிறார்களா என்பதைக் கவனியுங்கள். குறிப்பாக தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நேரத்திலும் கருணை செயல்களில் ஈடுபடுவோர், நல்லவர்களாகவே இருப்பர் .

10. அதிகாரமளித்தல்: நல்லவர்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு அதிகாரமளிக்கிறார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களைக் ஒதுக்கி வைக்காமல்  அவர்களை உயர்த்தி ஊக்கப்படுத்துகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com