உங்கள் வாழ்வில் வசந்தம் வீசணுமா? இருக்கவே இருக்கு இந்த 3 அற்புதமான வழிகள்!

Happy life
Happy life

- மரிய சாரா

மகிழ்வான வாழ்வு என்பது மனிதனாகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிற அதிகபட்ச ஆசைதான். நியாயமான ஆசையும்கூட. ஒரு மனிதன் அவன் வாழ்வில் செய்கின்ற அனைத்துமே அவன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அவனை நம்பி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகவும்தான்.

உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் செய்யவேண்டும் என்பது இல்லை. சாதாரணமாகத் தெரியும் சிலவற்றைக் கடைபிடித்தாலே போதும். அப்படியான மூன்று முக்கியமானவைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

1. நன்றி உள்ளவர்களாக இருங்கள்:

இன்றையச் சூழலில் அனைவருக்கும் முக்கியமாக குறைந்துகொண்டே வரும் பண்பு நன்றி உணர்வுதான். நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, நன்றி சொல்ல நேரம் ஏது? ஆனால் நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பது என்பது நமது மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணம். நமக்கு உதவியவர்களுக்கு நன்றி என்று சொல்லும்போதும் சரி, தக்க நேரத்தில் அவர்கள் செய்த உதவியை நாம் சாகும் வரை மறக்காமல் நன்றி உணர்வோடு இருப்பதானாலும் சரி, அது நம்மை என்றுமே மகிழ்ச்சியாகத்தான் வைத்திருக்கும். நமக்கு உதவியவர்களுக்கும் இன்னும் பலருக்கும் நாம் நிறைய உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும்.

2. உறவுகளை வளர்த்துக்கொள்வதில் நேரத்தை முதலீடு செய்யுங்கள்:

சிலர் எப்போது பார்த்தாலும் கடுகடு என்று இருப்பார்கள். 'மூஞ்சில கடுகு போட்டா பொறிஞ்சிடும் போல' என்றுகூட நாம் சொல்வதுண்டு. யாரிடமும் எளிதில் பழகவும் மாட்டார்கள். நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் யார் யார் நமக்கானவர்கள் என்றெல்லாம் முடிவு செய்வது காலம்தான். காரணமின்றி நமது வாழ்வில் யாரும் வரப்போவது இல்லை.

உங்களைச் சுற்றி உங்கள் உலகத்தில் உங்களோடு பயணிக்கும் உங்கள் உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு உங்களின் நேரத்தை ஒதுக்குங்கள். அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள், உடன்பிறத்தோர்,

நண்பர்கள், உறவினர்கள் என உங்களை நேசிக்கும் உறவுகள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்.

உங்களின் அவசரகதி வாழ்க்கையில் அவர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தை அவர்களிடம் அன்பு செலுத்துவதில் செலவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் தோல்வி என்பது நிரந்தரமல்ல!
Happy life

3. உங்களை நேசியுங்கள்:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முதலிடம் கொடுக்கவேண்டியது உங்களுக்குத்தான். ஏனென்றால் தன்னைத்தானே நேசிக்கத் தெரியாதவன் வெற்றியை அடைவது என்பது எட்டாக்கனிதான். ஒருவனுக்கு எல்லாம் இருந்தாலும் அவனுக்கு அவன் மீது நேசம் இல்லை. அவன் மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவன் வாழ்வு நரகம்தான். ஆனால், அவனிடம் ஒன்றுமில்லை என்றாலும் தன்னை நேசிக்கும் குணம் இருந்தால், எத்தனை முறை வீழ்ந்தாலும் அவன் நிமிர்ந்து நின்று வெற்றி அடைவது உறுதி.

மேலே விளக்கியுள்ள இந்த மூன்று முக்கிய வழிகளை ஒருவன் பின்பற்றினால் நிச்சயம் அவன் வாழ்வில் வசந்தம் வீசிடும். தோல்வி பலமுறை அவனை பதம் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் என அவன் எழுந்து ஒளி வீசிக்கொண்டே இருப்பான். எனவே, இந்த மூன்று வழிகளையும் மனதில் வைத்து வாழ்வில் வெற்றி பெற்று சிறக்க அனைவருக்கும் வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com