புத்திசாலித்தனம் என்பது பல விஷயங்களில் சிறப்பாக செயல்படும் திறன் ஆகும். இது வெறும் படிப்பு மட்டுமல்ல, சிந்திக்கும் திறன், பகுப்பாய்வு செய்யும் திறன், புதிய கருத்துக்களை உருவாக்கும் திறன், சிக்கல்களை தீர்க்கும் திறன் என பல விஷயங்களை உள்ளடக்கியது. புத்திசாலித்தனம் என்பது நிலையாக இருக்கக்கூடியது அல்ல. இது தொடர்ந்து வளரக்கூடிய ஒன்று. புத்திசாலிகள், மற்றவர்களிடமிருந்து சில குறிப்பிட்ட அம்சங்களால் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள். அந்த அம்சங்கள் அவர்களையும் அறியாமல் தானாக வெளிப்படும்.
உடல் மொழி மற்றும் தோற்றம்: புத்திசாலிகள் பொதுவாக அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்களின் உடல் மொழி வெளிப்படையாகவும், நேர்மறையாகவும் இருக்கும். அவர்கள் பிறர் கண்களை நேராகப் பார்த்து பேசுவார்கள். மேலும், அவர்களின் முக பாவங்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும். பெரும்பாலும், அவர்களின் தோற்றம், சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்.
ஆர்வம்: புத்திசாலிகள் எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் விஷயங்களை கவனித்து எல்லாவற்றைப் பற்றியும் கேள்வி கேட்பார்கள். புதிய கருத்துக்களை அதிக ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பார்கள்.
சிக்கலைத் தீர்க்கும் திறன்: புத்திசாலிகள் சிக்கலான பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் ஒரு பிரச்சனையை பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்ந்து, அதற்கான சிறந்த தீர்வை கண்டுபிடிப்பார்கள். சிக்கல்களுக்கான தீர்வை மேலோட்டமாக சிந்திக்காமல், லாஜிக்கல் முறையில் யோசித்து செயல்படுவார்கள்.
கற்பனைத்திறன்: புத்திசாலிகள் மிகுந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். எப்போதும் புதிய விஷயங்களை உருவாக்கி, அதில் அவர்களுக்கென கற்பனை உலகங்களை அவர்களால் உருவாக்க முடியும். மேலும், பல துறைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நகைச்சுவை உணர்வு: புத்திசாலிகளிடம் நகைச்சுவை உணர்வு அதிகமாகவே இருக்கும். அவர்கள் சூழ்நிலைகளை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும்திறன் கொண்டவர்கள். அவர்களின் நகைச்சுவை பெரும்பாலும் புத்திசாலித்தனமாகவும், சிந்திக்கும் படியும் இருக்கும்.
சுய விமர்சனம்: புத்திசாலிகள் தங்களைப் பற்றி எப்போதுமே நேர்மறையாக நினைப்பார்கள். அவர்களின் பலவீனங்களை அறிந்துகொண்டு அவற்றை மேம்படுத்த முயற்சிப்பார்கள். பிறரிடம் தன்னைப் பற்றி கருத்துக்களை கேட்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள விரும்புவார்கள்.
மேலே, குறிப்பிட்ட 6 அறிகுறிகளை புத்திசாலிகள் இயற்கையாகவே வெளிப்படுத்துவார்கள். இது பிறரிடம் அவர்களை சிறப்பான நபர்களாக எடுத்துரைக்கும். மேலே குறிப்பிட்ட விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்களும் உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும்.