நம் ஆற்றலை குறைக்கும் 6 நபர்கள் இவர்கள்தான்!

நம் ஆற்றலை குறைக்கும் 6 நபர்கள் இவர்கள்தான்!

மது வாழ்க்கை பயணத்தில் வரும் அனைவருமே நமது வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவர்கள் இல்லை. ஒரு சில விஷத்தன்மை கொண்டவர்களும் நமது வாழ்க்கையில் வந்து செல்கிறார்கள். அவர்களை துவக்கத்திலேயே கண்டுபிடித்து நாம் அவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. 

ஆரோக்கியமான உறவுகளை வளர்த்து உங்கள் நலனை காத்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்த 6 வகையான மக்களிடம் இருந்து விலகியிருங்கள். அதுதான் உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

1-நச்சுத்தன்மை கொண்டவர்கள்.

ச்சுத்தன்மை கொண்ட நபர்கள், தொடர்ந்து நம் வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை கொண்டு வருகிறார்கள். அவர்கள் விமர்சன மனநிலையில் இருப்பார்கள். மடை மாற்றிவிடுபவர்களாகவும், உணர்வு ரீதியாக திறமையற்றவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களிடம் இருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்வது நல்லது. அது உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்துக்கு நல்லது.

2-உங்களை மடை மாற்றிவிடுவார்கள்.

ங்கள் விருப்பம் மற்றும் சம்மதத்துக்கு மாறான வேலைகளை செய்யக்கூடியவர்கள்தான் இந்த மடை மாற்றும் நபர்கள். அவர்கள் எப்போதும் மற்றவர்கள் குறித்து அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். 

அவர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள இதுபோன்ற மடைமாற்றும் நபர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.

3-பொய்யுரைப்பவர்கள்.

வெள்ளைப்பொய்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுவிடமுடியும். ஆனால் உண்மை போலவே சித்தரிக்கப்படும் பொய்களை தொடர்ந்து பேசி வருபவர்களை நாம் விலக்கிவைக்க வேண்டும். அவர்களுக்கு பொய் பழக்கமாகிவிடும். நேர்மையின்றி இருப்பார்கள். 

இது உங்களின் நம்பிக்கையை சேதமாக்குவதுடன், அமைதியையும் குலைக்கும். தொடர்ந்து பொய்களை சித்தரிப்பவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. எனவே தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசிவருபவர்களை அடையாளம் கண்டு அவர்களை விலக்கிவைப்பது உங்கள் முன்னேற்றத்துக்கு உதவும்.

4-நார்சிஸ்டிக் எனப்படும் சுய நல மனப்பான்மை கொண்டவர்கள்.

நார்சிஸ்டிக் மனநிலை உடையவர்கள் எப்போதும் சுய நலவாதிகளாக இருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்கள் மீது அனுதாபம் கொண்டிருக்கக மாட்டார்கள். அவர்கள் மடைமாற்றுபவர்களாகவும், அடம் பிடிப்பவர்களாகவும், தங்களின் தேவைகளை அடம்பிடித்து நிறைவேற்றிக்கொள்பவர்களாகவும், உணர்வு ரீதியாக தவறான முறையில் பயன்படுத்து பவர்களாகவும் இருப்பபார்கள். 

இதுபோன்ற நார்சிஸ்டிக் மனநிலை உள்ள நபர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. இது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை ரசிக்க வைக்கும் GENKI உணர்வு! 
நம் ஆற்றலை குறைக்கும் 6 நபர்கள் இவர்கள்தான்!

5-உங்கள் ஆற்றலை போக்குபவர்கள்.

சில நபர்கள் உங்கள் ஆற்றலை போக்குபவர்களாக இருப்பார்கள். அவர்களின் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் அவநம்பிக்கைகள் மூலம் உங்களை பாடுபடுத்தும் நபர்களாக இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். உங்களை தாழ்த்தி பேசுவார்கள். 

எனவே இதுபோன்ற ஆற்றலை போக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருங்கள். நீங்கள் நேர்மறையாக இருப்பதற்கு இதுபோன்ற நபர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். இவர்கள் தேவையில்லாத வாக்குவாதம், சண்டை என்று இருப்பவர்கள்.

6-நடிப்பவர்கள்.

தற்காகவும் நடிப்பார்கள். மற்ற எவரையும் விட இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். எனவே இவர்களிடம் இருந்து விலகியிருங்கள். இவர்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து வரவிட்டீர்கள் என்றால், உங்களின் அமைதியை குலைத்துவிடுவார்கள். எனவே இவர்களுடன் இணைந்து இருக்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com