பணத்தால் வாங்க முடியாத 15 விஷயங்கள்... மக்களே தெரிஞ்சுக்கோங்க!

பணத்தால் வாங்க முடியாத முக்கியமான 15 விஷயங்கள்: Roy T. Bennett அவர்களின் கருத்து என்ன??? பார்க்கலாமா...
Things money can’t buy
Things money can’t buy
Published on

1963 ஆம் ஆண்டு பிறந்த ராய் டி. பென்னட் (Roy T. Bennett) அவர்கள், தி லைட் இன் தி ஹார்ட் (The light in the heart) என்ற புத்தகத்தை எழுதினார். எண்ணற்ற மக்கள் வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் வகையில் நேர்மறையான எண்ணங்களையும் படைப்பு நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்வதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். அவருடைய எழுத்துகள், நாம் முழுப் பலனை அடையும் வகையில் நம்மை ஊக்குவிக்கும் என்று அவர் நம்புகிறார்.

அவர் கருத்தின் படி, நாம் நம்முடைய மனதிற்குள் எந்த விதமான எண்ணங்களை ஊட்டுகிறோம் என்பது மிக மிக முக்கியம். ஏனென்றால் நம்முடைய எண்ணங்கள் தான் நமக்கு நம்பிக்கையையும் அனுபவங்களையும் உருவாக்குகின்றன என்பது தான் அவருடைய ஆழமான கருத்தாக இருக்கிறது.

மேலும் அவர், “நம்மிடம் நேர்மறையான எண்ணங்களும் உள்ளன அதே சமயத்தில் எதிர்மறையான எண்ணங்களும் உள்ளன.

கூடியவரை நீங்கள் உங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களோடு வைத்து கொள்ளுங்கள் அதாவது கருணை, பச்சாதாபம், இரக்கம், அமைதி, அன்பு, மகிழ்ச்சி, பணிவு, தாராள மனப்பான்மை போன்றவைகளால் மனதை நிரப்புங்கள், உங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களால் எவ்வளவு அதிகமாக ஊட்டுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வாழ்க்கையில் பெரிய விஷயங்களை ஈர்க்க முடியும்” என்றும் கூறுகிறார்.

“The light in the heart” என்ற புத்தகத்தை அவர் 2nd February 2020 ல் வெளியிட்டார். கிட்டதட்ட 252 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இந்த புத்தகத்தில் அவர் முழுவதும் உத்வேகமூட்டும் மேற்கோள்களை தான் எழுதி இருக்கிறார். அந்த மேற்கோள்களில் மிக முக்கியமான ஒன்று தான், “Top 15 Things Money Can’t Buy: Time, Happiness, Inner Peace, Integrity, Love, Character, Manners, Health, Respect, Morals, Trust, Patience, Class, Common sense and Dignity”.

அதாவது பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாத 15 விஷயங்கள் என்னவென்றால் நேரம், மகிழ்ச்சி, மன அமைதி, நேர்மை, அன்பு, குணம், நல்ல பழக்க வழக்கங்கள், ஆரோக்கியம், மரியாதை, ஒழுக்கம், நம்பிக்கை, பொறுமை, வர்க்கம், பொது அறிவு மற்றும் கண்ணியம்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான வாழ்வுக்கு தடை போடும் 6 விஷயங்களை நிறுத்துங்கள்!
Things money can’t buy

அத்தனை அழகாக கூறி இருக்கிறார். கண்டிப்பாக மேற் கூறிய இந்த 15 விஷயங்களையும் ஒரு போதும் பணத்தால் வாங்க முடியாது. இவற்றை நாம் தான் வளர்த்து கொள்ள வேண்டும். பணம் இருந்தும் இவைகள் இல்லை என்றால் ஒரு பிரயோசனமுமில்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com