ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

Meeting
Meeting someone for the first time

முதல்முறையாக ஒரு நபரை சந்திக்க போவதென்பது உற்சாகத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தும் அனுபவமாக இருக்கும். டேட்டிங், தொழில்முறை சந்திப்பு அல்லது புதிதாக அறிமுகமாவது என எதுவாக இருந்தாலும் ஒரு நேர்மறையான தோற்றத்தை நாம் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். இந்தப் பதிவில் ஒரு நபரை நீங்கள் முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.  

தகவல்களை சேகரிக்கவும்: முதல்முறையாக ஒருவரை சந்திப்பதற்கு முன் அவர்களைப் பற்றிய சில தகவல்களை சேகரிப்பது உங்களுக்கு பயனளிக்கும். முடிந்தால் இணையத்தில் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முற்படுங்கள். இப்போதெல்லாம் அனைவருமே சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள், நீங்கள் சந்திக்கப் போகும் நபரின் Profile-ஐ பார்த்து, ஓரளவுக்கு சில விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். இந்த அறிவு உங்களுக்கு அந்த நபருடன் ஈடுபாட்டுடன் உரையாட உதவும். 

சரியான உடை: First Impression is the Best Impression. முதல் முறை நீங்கள் ஒருவரை பார்க்கப் போகிறீர்கள் என்றால் அவர்களை எப்படி உணர வைக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதில் உங்களது வெளித்தோற்றத்தை பிரதிபலிக்கும் உடை மிகப்பெரிய பங்காற்றுகிறது. எனவே உங்களை சிறப்பாக காண்பிக்கும் உடையை தேர்ந்தெடுத்து அணிந்து செல்லுங்கள்.

வருகை நேரத்தை திட்டமிடுங்கள்:  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க முடிவெடுத்திருந்தால், அந்த நேரத்திற்கு சரியாக செல்லவும். சில நிமிடங்கள் முன்கூட்டியே வருவது, நீங்கள் மற்றவரின் நேரத்தை மதிக்கிறீர்கள் என்பதையும், அவர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதையும் தெரியப்படுத்தும் காரணியாகும். எனவே சரியான நேரத்திற்கு சரியானபடி செல்லுங்கள். எதிர்பாராத சூழ்நிலைகளால் தாமதம் ஏற்பட்டால், உடனடியாக அந்த நபருக்கு தெரியப்படுத்தி சிரமத்திற்கு மன்னிப்பு கேட்கவும். 

உடல் மொழியில் கவனமாக இருங்கள்: உங்கள் உடல் மொழியே நீங்கள் அந்த நபருடன் பேசுவதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெரியப்படுத்திவிடும். எனவே உங்கள் உடல் மொழியில் கவனமாக இருங்கள். நீங்கள் அந்த நபரை சந்தித்து பேசுவதில் உற்சாகமாக உள்ளீர்கள் என்பதற்கான தோரணையை எப்போதும் பராமரிக்கவும். அவர்கள் சொல்வதற்கு தலையசைக்கவும், கண்களை பார்த்து பேசவும், அவ்வப்போது புன்னகைக்கவும். இது நீங்கள் ஆர்வத்துடன் இருக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும். 

நீங்கள் நீங்களாக இருங்கள்: உங்களிடம் இல்லாத தன்மைகளை போலியாக காட்ட முயற்சிக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். ஏனெனில் பலருக்கு ஒருவர் உண்மையாக இருப்பதே அதிகம் பிடிக்கும். எனவே போலி நாடகம் போடாமல், உங்களுடைய உண்மையான பண்புகளை வெளிக்காட்டுங்கள். 

இதையும் படியுங்கள்:
ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Meeting

பேசுங்கள், கேளுங்கள்: நீங்கள் சந்திக்கப் போகும் நபர் சரியாக பேசவில்லை என்றாலும், நீங்களாக பேசத் தொடங்குங்கள். அவர்களைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் உள்ள பொதுவான விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்டு நன்கு உரையாடலாம். அதேநேரம் எதிரே உள்ள நபர் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் பேசும்போது இடைமறிக்காமல், முழுமையாக பேசி முடித்ததும், நீங்கள் பதில் சொல்லுங்கள். இது உங்கள் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தும். 

மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை சரியாகப் பின்பற்றி நடந்து கொண்டாலே, உங்களின் முதல் சந்திப்பு சிறப்பானதாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com