பேரிச்சம்பழம் அனைவருக்குமே பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு சுவையான பழமாகும். அவை நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் நல்லது என்றாலும், குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்தில் சில அதிக நன்மைகளை வழங்குகின்றன. இப்பதிவில் ஆண்களுக்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
பேரிச்சம்பழத்தில் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற வைட்டமின்களையும், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்களும் ஆண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பேரிச்சம்பழத்தில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது ஆண்களின் ஆற்றலை அதிகரிக்கும். குறிப்பாக காலையில் சாப்பிடும்போது அந்த நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்கும். எனவே ஆண்களுக்கு உடற்பயிற்சிக்கு முன் அல்லது பிந்தைய உணவுக்கு ஏற்றதாக பேரிச்சம்பழம் இருக்கும்.
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க அவசியம். போதுமான அளவு நார்ச்சத்து உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. எனவே ஆண்கள் தவறாமல் பேரிச்சம்பழத்தை உட்கொள்ளும்போது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியமும் சிறப்பாக மாறும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் வலுவான எலும்புகளைப் பராமரிக்க அவசியம். குறிப்பாக வயதாகும்போது எலும்பின் வலிமையை அதிகரிக்க பேரிச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. எனவே ஆண்கள் உணவின் ஒரு பகுதியாக பேரிச்சம் பழங்களை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
பேரிச்சம்பழம் தாவர அடிப்படையிலான புரதத்தின் இயற்கையான மூலமாகவும். இது தசை வளர்ச்சி மற்றும் உடற்பயிற்சிக்கு பிந்தைய ரெக்கவரி போன்றவற்றிற்கு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சிகள் ஈடுபடும் ஆண்கள் தங்கள் தசையை வளர்ப்பதற்கு பேரிச்சம் பழத்தில் உள்ள புரதம் பெரிதளவில் உதவும்.
பேரிச்சம்பழம் ஆண்களுக்கு இதய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றில் உள்ள பிளாவனாய்ட் மற்றும் கரோட்டினாய்ட் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இந்த பண்புகள் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
பேரிச்சம்பழம் ஆண்களுக்கான பாலுறவுணர்வு சார்ந்த பிரச்சனையை சரி செய்வதாக பாரம்பரியமாகவே நம்பப்படுகிறது. இதற்கு அறிவியல் சான்றுகள் குறைவாக இருந்தாலும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கும் சில கலவைகள் பேரிச்சம்பழத்தில் உள்ளன.
ஆண்கள் தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் வலுவாகவும், கட்டுமஸ்தாகவும் இருக்கும். ஆனால் ஒரே சமயத்தில் அதிகப்படியான பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது. அதில் சர்க்கரை அளவும் உள்ளது என்பதால், தினசரி இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இதை நேரடியாகவோ அல்லது உங்களுக்கு பிடித்த ஸ்மூர்த்தி போன்றவற்றில் சேர்த்தோ சாப்பிடுங்கள். இது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கூடுதல் பூஸ்டராக செயல்படும்.