நிதானம் இழந்தால் என்ன ஆகும்? விறகு வெட்டியின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத பாடம்!

woodcutter and his son | short moral story
woodcutter and his son | short moral storyImage credit: AI image
Published on

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் தினசரி காட்டுப்பகுதிக்குச்சென்று விறகு வெட்டிவந்து மறுநாள் பக்கத்து கிராமங்களில் விற்பனை செய்து ஜீவனம் செய்து வந்தான்.

அதேபோல ஒரு நாள் விறகு வெட்டிக்கொண்டிருந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமானதால் வியர்த்துப்போய் கொஞ்சம் களைப்பாக இருந்தான்.

பின்னர் அவனது மனைவி கொடுத்தனுப்பிய மதிய உணவை மகன் எடுத்து வந்தான்; நல்ல ருசியான உணவை ரசித்து சாப்பிட்டான்.

அதன்பிறகு மகனிடம் ஒரு விறகு கட்டையை கொடுத்து இதை வைத்துக்கொண்டு மரத்தில் அடித்து விளையாடு என சொல்லிக்கொடுத்தான். அதன்படியே மகனும் கட்டையை வைத்துக்கொண்டு மரம் மற்றும் செடிகளில் அடித்து விளையாடிக்கொண்டிருந்தான். அதுசமயம் ஒரு பொிய, ஈ அங்குவந்து அவனது தகப்பனாா் காது பக்கம் சென்று ரீங்காரம் செய்துவந்து அவரை வேலை செய்ய முடியாமல் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது.

விறகு வெட்டி அதைத் துரத்துவதும் அது திரும்பத்திரும்ப வந்து, அவனது தலையில் உட்காருவதுமாகவே இருந்தது. தொடர்ந்து தொந்தரவு செய்தபடியே இருந்து வந்தது.

அதைப்பாா்த்த விறகு வெட்டியின் மகன் மனதிற்குள் ஒரு திட்டம் போட்டான்.

திரும்பவும் ஈ வந்து தந்தையின் தலையில் உட்காா்ந்தால் அதை தான் வைத்திருக்கும் கட்டையைக்கொண்டு அடித்துவிடுவது என முடிவு செய்தவுடன், மீண்டும் வந்து தந்தையின் தலையில் அமர்ந்த ஈயை அடிக்க முற்படும் வேளையில், ஈ பறந்து போனதால் தந்தையின் தலையில் அடி விழுந்தது, நல்ல வேளை பொிய காயம் எதுவும் ஏற்படாமல் விறகு வெட்டி தப்பித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ‘மனசிருக்கணும்… மனசிருக்கணும்…!’
woodcutter and his son | short moral story

இதனால் என்ன தொிகிறது என்றால் புத்தி இல்லாமல், நிதானிக்காமல், எந்த காாியமும் செய்யக்கூடாது என்பதும் இதுபோன்ற அறிவில்லாத செயல்பாடுகள், பின் விளைவையே ஏற்படுத்தும் என்பதையே உணரவேண்டும் (short moral story). புத்திமான் பலமான் ஆவானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com