பேசும் முன் யோசி! எழுதும் முன் சிந்தி! - வாழ்க்கையை மாற்றும் 3 ரகசியங்கள்!
ஒரு விஷயம் நம் காதுக்கும் கவனத்திற்கும் வருகிறது. நமது நண்பர் ஒருவரைப்பற்றி சில குறைபாடுகளை நம்மிடம் சொல்கிறாா். ஆவேசமும் அடைகிறாா்.
நீங்கள் கேட்டுச்சொல்லுங்கள் இல்லையேல் நான் நிச்சயம் தேவையில்லாமல் விவாதம் செய்ய நோிடும் என வாா்த்தைகளால் வரிசைகட்டுகிறாா், என வைத்துக்கொள்வோம்,
அதை நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு, சரி நான் கேட்டுசொல்கிறேன் என அவரை சமாதானம் செய்து அனுப்பிவைக்க வேண்டும். அதை விடுத்து ஆமாம், ஆமாம் அவரது நடவடிக்கை சரியில்லைதான் நானே பாா்த்துக்கொன்டுதான் வருகிறேன் என நமக்கு தொியாத தகவல்களை நண்பருக்காக சொல்லக்கூடாது.
அதேபோல அவரிடம் போய் சொல்லும்போது அதை நிதானமாக கேளுங்கள் அவர் என்ன சொல்ல வருகிறாா் என்பதை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.
ஓய்வு நாளில் அவரை அழைத்து வருகிறேன் பேசி தீா்த்துவிடலாம் ஒருவரை ஒருவர் புாிந்துகொள்ளாமல் கவனச்சிதறலால் கருத்து வேறுபாடு வந்துள்ளது உட்காா்ந்து பேசினால் சரியாகிவிடும் என சொல்லுங்கள்.
ஒருநாள் மூவரும் சந்தித்து அவரவர் கருத்துக்களை நன்கு கேட்டு புாிந்துகொண்டு அதன்படி சமரசம் பேசி மனமாச்சர்யங்களைக்களைய வழிவகை செய்வதே நல்லது. அதற்குத்தான் எந்த விஷயம், எந்த காாியமாக இருந்தாலும் அவரவர் சொல்வதை நன்கு கேளுங்கள். பொதுவாகவே பிறர் என்ன சொல்ல வருகிறாா் என்பதை நாம் கவனமாக கேட்பதே நல்லது.
நாமே பேசிக்கொண்டிருக்காமல் அடுத்தவர் உணர்வு களுக்கும் மதிப்பு கொடுப்பதே நல்லது.
அதேபோல ஒரு முக்கியமான விஷயம் குறித்து கடிதம் மூலம் தகவலை எழுதிக்கேட்கும் நிலை. அந்த நேரத்தில் விஷயத்தின் தன்மை முக்கியம்.
அவசரம் அவசியம், கால நேரம் பாா்த்து நயமாக எழுதுங்கள்.
நமக்கு சரியென நாம் நினைக்கும் சொல்லாடலோ, வாா்த்தைப்பிரவாகமோ, அடுத்தவர் மனதை புண்படுத்தாத வகையில் வாா்த்தைகளால், உறவில் விாிசல் விழாதவகையில் நன்கு சிந்தித்து எழுதுங்கள்.
பொதுவாகவே எதை எழுதினாலும் அதன் அர்த்தம் அனர்த்தமாக மாறிவிடாமல் நமது எழுத்துஅமைவதே நல்லது.
அதேபோல ஒருவரிடம் போனில் பேசும்போது பேசலாமா, நேரம் இருக்கிறதா, இருசக்கர வாகனத்தில் போகிறீா்களா, பயணம்செய்தவாறே பேசாதீா்கள், என சொல்லுங்கள். பிறகு பேசவா எனக்கேளுங்கள். அதுவே நல்ல செயலாகும்.
மூன்றாவது இனமாக ஒரு முதலீடு, அல்லது மனை வாங்குதல், காா், பைக்வாங்குவது இப்படி பெரிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது கொஞ்சம் சிந்தனை செய்து, அதற்குாிய தொகை நம்மிடம் உள்ளதா கடன் வாங்கினால் சரிவர திருப்ப செலுத்த வாய்ப்பு எப்படி இருக்கும்? என திருமதியிடம் கலந்து ஆலோசித்து நல்ல முடிவாக எடுங்கள்.
அதற்கு தகுந்தவாறு நாம் நிறைய சம்பாதிக்க முற்படுதலே சிறந்த வழி. வருவாய்க்கு வாய்ப்பு என்ன என்ற வழியைத் தேடுங்கள். அதுதான் உத்தமம். எப்படியும் கடனை அடைத்துவிடலாம் என அதீத நம்பிக்கை சில சமயங்களில் பொய்த்துவிடுமே!
அடுத்தவருக்காக நாம் பெருமைக்கு ஆசைப்பட்டு, அகலக்கால் வைப்பது தொல்லையைத்தான் தரும். அடுத்தவருக்காக வாழ நினைத்து வரவுக்கு மீறிய செலவு செய்து நம் வாழ்க்கையை நாமே தொலைப்பதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லையே!
இதனால் நமது குடும்பத்தின் அமைதி, சந்தோஷம், எல்லாம் தொலைந்துவிடுமே!
இதைத்தான சூசகமாக பேசுமுன் கேளுங்கள். எழுதும் முன் யோசியுங்கள். செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்,
ஆக நாம் பேசும் பேச்சில், எழுதும் எழுத்தில், மேற்கொள்ளும் காாியங்களில் நிதானம் கடைபிடியுங்கள். ஒரு காாியம் செய்வதற்கு முன்பாக பலமுறை சிந்தியுங்கள், அதுவே சிறப்பான வாழ்விற்கான பலமான அஸ்திவாரம். பேஸ்மெண்ட் வீக், பில்டிங் ஸ்டிராங் என அமைந்தால் எப்படி நன்மையாகும்?