ஜே. கே. சொல்லும் இந்த விழிப்புணர்வு இருந்தால் போதும் வெற்றிக்கு!

Jiddu Krishnamurthy
Jiddu Krishnamurthy

ஜே. கே. சொல்லும் இந்த விழிப்புணர்வு இருந்தால் போதும் வெற்றிக்கு!
“What is important is not to read more, discuss more, or to attend more talks, but rather to be conscious of the motives, the intentions, the deceptions of one's own mind.
மிக முக்கியமானது என்னவென்றால், நிறையப் படிக்க வேண்டாம், கலந்துரையாட வேண்டாம், நிறைய சொற்பொழிவுகளுக்குச் செல்ல வேண்டாம், அதைவிட நம் உந்துதல்கள், அதன் உள்நோக்கங்கள், நம்முடைய மனதின் சொந்த ஏமாற்றங்கள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுதான்.” Jiddu Krishnamurthy.


ந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமான வரான  ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனும் ஜே.கே உலகளவில் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுபவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல் களையும் நிகழ்த்திய இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் வளர்ப்பு மகன் எனவும் அறியப்படுகிறார்.

வெற்றிக்கு நிறையப் படித்து அறியவேண்டும். மற்றவர்களுடன் நிறைய கலந்துரையாட வேண்டும். நிறைய நல்ல கருத்துகளை கூறும் சொற்பொழிவுகள் கேட்கவேண்டும். இப்படி நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால் இவற்றை எல்லாம் விட  நம்முள் எழும் உந்துதல்கள், அதன் உள் நோக்கங்கள், நம் மனதின் சொந்த ஏமாற்றங்கள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுதான் மிக முக்கியத்தேவை என்கிறார் தத்துவ ஆசிரியர் ஜி. கே.

கிராமத்தில் இருக்கும் தாத்தாவைக்காண வந்தான் இன்ஜினியரிங் முடித்த பேரன். நகர வாழ்க்கையில் பழகிய அவனுக்கு கிராமத்தின் வழக்கங்கள் பழக நாளானது. தள்ளாத வயதிலும் தாத்தாவின் தளராத நடையும்,  மாடுகளிடம் அவர் பேசிப் பால் கறக்கும் விதமும், பம்ப் செட் நீரில் கோமணத்துடன் நீரில் நீந்தி குளிக்கும் முறையும், வயலில் இறங்கி களை எடுக்கும் வேகமும், பாட்டியிடம் சமையல் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு பழகும் பதமும், ஊரின் பிரச்சினைகளை பேசியே முடிவுக்கு கொண்டு வரும் விவேகமும் பேரனை வியக்க வைத்தது.

கஞ்சியையும் களியையும் சாப்பிடத் தெரியாமல் தடுமாறும் பேரனைக் கண்டு சிரித்த தாத்தாவிடம் கேட்டான் பேரன் "தாத்தா எப்படி உங்களால் மட்டும் இத்தனை வேலைகளையும் டென்ஷன் இல்லாமல் செய்ய முடிகிறது? எங்களுக்கு கையில் இருக்கிற மொபைல் ஃபோனை தட்டுனா எல்லா விஷயமும் வந்துடுது. ஆனால் நீங்களோ எல்லா விஷயத்தையும் கைவிரல் நுனியிலயும் மனசுக்குள்ளயும் வச்சிருக்கீங்க. எப்படி உங்களால முடியுது..?"

"கண்ணா நீங்கள் எல்லாம் அறிவ கொண்டு பாக்குறீங்க நான் என்னோட மனசுக்குள்ள கத்துக்கிட்டத வெளியில செய்யறேன். அறிவுக்கு தேவை ஏட்டுக்கல்வி. நீ எத்தனை டிகிரி வேணா படிக்கலாம். ஆனா வாழ்க்கையில வெற்றி பெறணும்னா நம்முடைய மனசு சொல்றத ஆழ்ந்து கவனிக்கணும். நமக்கு எச்சரிக்கை தரும் உள்ளுணர்வுக்கு பழகிட்டா எந்த விஷயமும் சுமையா தெரியாது. அந்த உள்ளுணர்வே அதை நோக்கி நம்மை செலுத்திடும். நமக்கு ஏற்படற அனுபவங்கள் தர்ற ஏமாற்றங்கள்ல இருந்து நிறைய விழிப்புணர்வ கத்துக்கணும். இந்த பூமியில் பிறந்த நாம நல்ல  மனுஷனா வாழ்ந்து  மடியணுங்கிற என்னுடைய மனம் சொல்றத நான் கேட்கிறேன். என்னுடைய மனசு நல்லது சொல்றதால உடம்பு உறுதியா இருக்கு. இதுதான் விஷயம் வேற ஒண்ணும் இல்லப்பா."

இதையும் படியுங்கள்:
பயத்தை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்!
Jiddu Krishnamurthy

பேரனுக்கு ஏதோ புரிந்தும் புரியாததுபோல் இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. இனி காலையில் எழுந்ததும் மாங்கு மாங்குன்னு யாரோ எழுதிய சக்சஸ் ஸ்டோரிஸ்  படிக்கிறத விட தாத்தா சொன்னது போல தன்னோட மனசு என்ன சொல்லுதுனு  பத்து நிமிஷம் ஒதுக்கி கேட்டு அதன் வழி நடக்க வேண்டும் என்பது. ஊருக்கு வந்ததும் அவன் செய்த முதல் காரியம் இதுதான்.

தன் உள் நோக்கம் என்ன?   இதுவரை பெற்ற ஏமாற்றங்களில் இருந்து கற்றது என்ன என்று ஒரு காகிதத்தில் எழுதி தானும்  தாத்தாவும் இருக்கும் சுயமிப் புகைப்படத்தை அதில் ஒட்டி தாத்தாவின் வழியில் வாழ்க்கையில் நிறைவான வெற்றியை பெற முடிவு செய்தான்.

நாமும் நம் மனசு சொல்றத காது கொடுத்துக் கேட்டு வெற்றி பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com