
வாழ்க்கை என்பது ஆயிரம் காலத்துப்பயிா். அது இறைவன் நமக்கு கொடுத்த கொடை. அது சிறக்க நம்மிடையே நல்ல பண்பாடு,நல்ல பழக்க வழக்கம், தர்மசிந்தனை, நல் ஒழுக்கம், நோ்மை தவறாமை, நிதானம் , தெய்வ நம்பிக்கை உழைப்பு, விடாமுயற்சி இவைகள் இருக்கலாம்.
ஆனால். அதைவிட பொியதாய், விலைமதிப்பில்லாத ஒன்று நம்மிடம் கடைசி வரை நிரந்தரமாக இருக்கவேண்டும்.
அதுதான் அன்பு.
அன்புள்ளம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இறைவன் இருப்பான் என்ற வழக்கம் உண்டு. அது நம்மிடத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அதை சரிவர பயன்படுத்துவது கிடையாது.
இதனால் அது தொலைந்து போய் விடுவதால் நாம் வாழ்வில் சாதிக்க வேண்டியதை சாதிக்க முடியாமல் தவிப்பதும் உண்டு.
அன்பால் எதையும் சாதிக்க முடியும், அதே நேரம் வம்பால் எதையும் சாதிக்க முடியாது!. நாம், மிகவும் நேசித்த ஒரு பொருளை தொலைத்துவிட்டால் அதை பல இடங்களில் தேடிக் கண்டுபிடித்து விடலாம். மாறாக கிடைக்காத நிலையில் அதேபோல வேறு ஒன்றை வாங்கியும் விடலாம். ஆனால் அன்பு காட்டாமல் எதையும் சாதிக்க முடியாது.
அதேபோல அன்பு காட்டாமல் உறவுகள் நீடிக்காது. அப்படி ஏதாவது காரணத்தினால் மனமாச்சா்யங்களால் ஒருவரை ஒருவர் புாிந்து கொள்ளாத நிலையில் அன்பை பிராதனமாக கடைபிடிக்காமல் போய் பிாிவு ஏற்பட்டாலும், விவேகம் கடைபிடித்து, அன்பு பாராட்டி ஏதாவது ஒரு வகையில் தொலைந்த அன்பை தொலைத்த இடத்திலேயே தேடவேண்டும். அதை விடுத்து தொலைத்த இடம் விட்டு வேறு இடம் தேடினால் அது கிடைக்கவே கிடைக்காது.
அன்பிற்கு எல்லையே கிடையாது. அதை யாராலும் அடைத்து வைக்க முடியாது. வாழ்வின் முக்கிய மூலாதாரமே அன்புதான்.
இதைத்தான் வள்ளுவர் திருக்குறளில், அன்புடமை அதிகாரத்தில்,
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆா்வலா் புன்கணீா் பூசல்தரும் என எழுதி உள்ளாா்.
அப்படிப்பட்ட உயர்ந்த விலைமதிப்பில்லாத அன்பை நாம் அனைவரிடத்திலும் செலுத்தவேண்டும். அத்தகைய அன்பிற்கு ஏதேனும் ஒரு வகையில் புாிந்து கொள்ளா நிலையில் பிாிவு வந்தால் அதை அன்பு பாராட்டி, கோபம் தவிா்த்து, முறியடித்து விடவேண்டும். அன்பு நெறி தவறாமல் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.
அன்பு நிரந்தரமானது
அது காலத்தால் அழியாதது.
அதை தொலைத்துவிட்டால் தொலைத்த இடத்திலேயே தேடுவோம்.
"அன்பேசிவம்!