

நாம் பிறரிடம் சென்று உதவி கேட்க வேண்டும் என்றால் தயக்கம் காட்டுவோம். "மற்றவர்களிடம் உதவி கேட்டால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்" என்று யோசிப்போம். ஆனால், Ben franklin effect சொல்வதே வேறு. அது சொல்வது என்னவென்றால், நாம் ஒருவரிடம் உதவி கேட்கும் போது அவர்களுக்கு நம்மை அதிகமாக பிடிக்க ஆரம்பிக்குமாம். இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
Ben franklin என்று ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு எதிரி இருந்திருக்கிறார். அந்த நபருக்கு Ben franklin ஐ சுத்தமாக பிடிக்காது. Ben franklin அந்த எதிரியின் மனதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக அவரிடம் சென்று சண்டையும் போடவில்லை. அவரை புகழ்ந்தும் பேசவில்லை. அதற்கு பதில் அந்த எதிரியிடம் இவர் புத்தகத்தை கடனாக கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் எதிரிக்கு குழப்பமாக தான் இருந்திருக்கிறது. எத்தனையோ பேர் இருக்கும் போது நம்மிடம் உதவி கேட்கிறான் என்று நினைத்திருக்கிறார். இருப்பினும் புத்தகத்தை கடனாக கொடுக்கிறார்.
Ben franklin அந்த புத்தகத்தை படித்துவிட்டு திரும்பவும் அவரிடமே கொடுத்து விடுகிறார். ஆனால், Thank you for the book என்ற நோட் ஒன்றும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். அந்த தருணத்திற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் உள்ள உறவு நன்றாக மாறியுள்ளது. இதை தான் Ben franklin effect என்று சொல்வார்கள். எப்போதுமே நமக்கு பிடிக்காதவர்களுக்கு நாம் உதவி செய்ய மாட்டோம். ஆனால், அதை ஒருமுறை உடைத்து அவர்களுக்கு உதவி விட்டோம் என்றால், நம்முடைய மூளை அவர்களைப் பற்றி நமக்கு இருக்கும் கருத்தையே மாற்றிவிடும்.
அவர்களை நமக்கு பிடிக்கும் போல அதனால் தான் நாம் அவர்களுக்கு உதவியிருக்கிறோம் என்று நம்முடைய மூளை நம்மையே Manipulate செய்யுமாம். இதை கேட்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
நாம் பிறரிடம் உதவி கேட்டால் அவர்களுக்கு நம்மை பிடிக்காமல் போய்விடுமோ என்று நம்மில் பலர் நினைத்துக் கொள்வோம். அதனாலேயே உதவி தேவைப்பட்டால் கூட கேட்க மாட்டோம். ஆனால், இந்த Ben franklin effect அதற்கு எதிராக சொல்கிறது.
அடுத்தமுறை உங்களை யாருக்காவது பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், அவர்களிடம் சின்ன சின்ன உதவிகளை கேளுங்கள். இந்த ரெண்டு டிரெஸ்ஸில் எது நன்றாக இருக்கிறது? என்பது போன்ற Opinion கேளுங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர்களிடம் சென்று அறிவுரை கேளுங்கள். இல்லை ஒரு பேனாவோ அல்லது புத்தகமோ கடனாக கேளுங்கள். அவர்களை உங்களுக்காக ஒரு சின்ன வேலை செய்ய வையுங்கள். இதுப்போல செய்யும் போது அவர்களுக்கு நம்மை அதிகமாக பிடிக்குமாம். முயற்சித்துப் பாருங்களேன்.