ரோல்ஸ்ராய்ஸ் கார் தருமா ஸ்டேட்டஸ்? நம்ம ஸ்டேட்டஸ் உயர இதெல்லாமும் வேண்டும்!

Rich
Rich
Published on

பொதுவாகவே ஒவ்வொரு மனிதருக்கும் சமூக வெளியில் தனக்கான அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. ஸ்டேட்டஸ் (Status)அல்லது அந்தஸ்து என்பது ஒருவர் உடுத்தும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள், செல்லும் வாகனம், வசிக்கும் வீடு போன்றவைகளிலும் எடை போடப்படும். பதவி, படிப்பு, பணம் போன்றவற்றைக் கொண்டும் நிர்ணயிப்பார்கள்.

ஆனால் இவைகள் மட்டுமே ஒருவருக்கான ஸ்டேட்டஸாக இருக்க முடியுமா நமது ஸ்டேட்டஸ் இந்த சமூகத்தில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் ?ஸ்டேட்டஸ் என்பது எந்த வழிகளில் மதிப்பிடப்படுகிறது ஏன்பது பற்றிய ஒரு பார்வை இங்கு.

ஸ்டேட்டஸ் என்பது எக்ஸ்டெர்னல் ஸ்டேட்டஸ் (External Status), இன்டெர்னல் ஸ்டேட்டஸ்(Internal Status) என 2 வகைகளில் வருகிறது.

எக்ஸ்டெர்னல் ஸ்டேட்டஸ்( External Status) கீழ் எவையெல்லாம் வரும்?

நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் , சொத்து , ஏதேனும் ஒன்றில் சாதித்து அதன் மூலம் வரும் புகழ், கற்ற கல்வி மூலம் அடையும் பதவி, தற்போது இருக்கும் டிஜிட்டல் அல்லது சமூகத்தில் பின்பற்றுபவர்கள் (Followers) எண்ணிக்கை, எவரும் எளிதில் அடைய முடியாது ஏதேனும் உயர்ந்த பொருள் உதாரணமாக (ரோல்ஸ்ராய்ஸ் கார்) இவைகளும் வாழ்க்கையில் தேவைதான். ஆனால் இவைகளே வாழ்க்கையாகி விடாது.

இன்டெர்னல் ஸ்டேட்டஸ்( Internal Status ) கீழ் வருபவைகள்..

1. Confidence நம்பிக்கை

2. Self-respect சுய மரியாதை

3. Emotional stability உணர்வு சமநிலை

4. Purpose நிறைவு நோக்கம்

பொதுவாக வெளிப்படையாக நோக்கும்போது எக்ஸ்டர்னல் ஸ்டேட்டஸ் ஸ்டேட்டசையே பெரும்பாலும் நம்புவார்கள் ."ஆஹா அவரிடம் எத்தனை சொத்து இருக்கிறது , இந்த பதவி இருக்கிறது, நம்மால் வாங்க முடியாத அந்த கார் அவரிடம் இருக்கிறது, அடேங்கப்பா அவர் பின்னால் இத்தனை தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற புகழ் உரைகள் அந்த நபரின் ஸ்டேட்டஸை நிர்ணயிப்பதாக இருக்கும்.

ஆனால் அது உண்மையா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .காரணம் இவைகளில் எதுவும் இன்டர்னல் ஸ்டேட்டஸ் எனப்படும் அவரது மனதில் நிறைவை ஏற்படுத்தாது.

என்ன சொல்றீங்க? இவைகள் இல்லை எனில் நமது உண்மையான ஸ்டேட்டஸ் என்பது எதில் இருக்கிறது ?

நிச்சயமாக நம்முடைய நம்பிக்கையிலும் சுயமரியாதையிலும் எந்த நிலையிலும் சமநிலையுடன் இருக்கும் மனதிலும் எனக்கு இது கிடைத்திருக்கிறது அல்லது இதை வைத்து நான் பிறரின் பிறருக்கு உதவுவேன் என்னும் மன நிறைவிலும்தான் அடங்கி இருக்கிறது ஒருவரின் உண்மையான ஸ்டேட்டஸ் அல்லது அந்தஸ்து.

வெறும் பதவியும் பட்டமும் வைத்துக்கொண்டு எவருக்கும் எதையும் வழிகாட்டாமல் வாழ்பவர் மற்றவர்களால் அந்தஸ்து மிக்கவராக கருதப்பட மாட்டார்கள். அதே போல் rolls-royce கார் வைத்திருக்கும் நபர் அவரின் சொந்த உபயோகத்துக்கு தான் அந்த காரை வைத்திருக்கிறார் .அது சமூகத்திற்கு பயன்பாட்டில் அல்ல என்பதை உணர வேண்டும்

இதையும் படியுங்கள்:
'நம்முடைய வேண்டுதல் நிறைவேறுமா இல்லையா?' - கனவில் வந்து சொல்லும் முருகன்!
Rich

நம்முடைய கான்ஃபிடன்ஸ் லெவல் அல்லது நம் மீது உள்ள நம்பிக்கையை நாம் உயர்த்திக் கொள்ள சில டிப்ஸ் இங்கு..

1. Develop skills உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

2. Integrity நேர்மையை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் கடைப்பிடித்து வாருங்கள்.

3. Emotional intelligence வெற்றியோ தோல்வியோ அவமானமோ புகழுரையோ எதிலும் உணர்வுகளை நுண்ணறிவுடன் சமநிலையில் வைத்திருங்கள்.

4. Focus on work எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் ஒரு முகமாக கவனம் செலுத்துங்கள்.

5. Create values for others உங்கள் மீது மதிப்பு வரவேண்டும் எனில் நீங்கள் மற்றவர்கள் மதிப்பு அறிந்து அதைத் தர தயங்காதீர்கள்.

சரி நீங்கள் சொல்வது போல் என் மீது உள்ள நம்பிக்கையை நான் விடவில்லை .ஆனாலும் சில சமயங்களில் சிலர் என்னை இன்சல்ட் insult செய்கிறார்கள் நான் என்ன செய்ய வேண்டும்.?வாட் அபௌட் இன்சல்ட் (what about insult?). இந்த கேள்வி அனைவருக்கும் உரித்தானதே .

இதையும் படியுங்கள்:
ஒரு தண்ணீர்க் கதை
Rich

ஏதேனும் ஒரு தருணத்தில் பலரின் புறக்கணிப்புகள் அல்லது அவமானங்களை கடந்துதான் வந்திருப்போம். இந்த இன்சல்ட்டுகளுக்கு எதிராக நாம் செய்ய வேண்டியது keep smile and move on என சிரித்துக் கொண்டே கடந்த விட வேண்டும் . ஏனெனில் காலம் அந்த இடத்திலேயே நிற்பதில்லை.

இறுதியாக Believe in yourself. உங்களை நீங்கள் நம்புங்கள். மேலே கூறிய வழிகள் மற்றும் நற்செயல்கள் மூலம் உங்கள் ஸ்டேட்டஸை உயர்த்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com