எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்கான வழிகள் இதுதானா?

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

ன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒரு மோட்டிவேஷன் பெறுவதற்கான காணொளிகளைக் கண்டு ஒரு செயலைச் செய்வதாகத் திட்டமிடுவோம். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே மோட்டிவேஷன் இல்லாத நிலையில் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடுபவர்கள்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் உள்ளனர். ஒரு செயலைத் தொடர்ந்து செய்ய வெறும் மோட்டிவேஷன் மட்டும் பத்தாது ஒழுக்கமும் வேண்டும். எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய நான்கு ஒழுக்க நெறிமுறைகளை இதில் பார்ப்போம்.

1.ஒழுக்கம் - சுதந்திரம், நமக்குப் பிடித்த காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் கண்டுவிட்டு, நினைத்து திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, விரும்பியவற்றையெல்லாம் சாப்பிட்டு, நினைத்தபடி தூங்குவதற்குப் பெயர் சுதந்திரம் அல்ல சோம்பேறித்தனம்.

நாம் நினைத்ததை நினைத்தபடி செய்வதற்கு என்றும் நமக்கு விருப்பம் இல்லாதவற்றைச் செய்ய வேண்டும். அதாவது தீயவற்றைக் கூறவில்லை. நல்ல செயல்முறைகளை ஒழுக்கமுடன் தொடர்ந்து செய்வதால் நீங்கள் நீண்ட காலத்திற்குச் சுதந்திரமாக வாழ முடியும்.

2. அதிகாலை எழுந்திருப்பதால் நீங்கள் வெற்றியாளர் களாக மாறுவீர்களா என்றால் நிச்சயம் கிடையாது. நீங்கள் எப்போதும் வழக்கமாக எழும் நேரத்திலேயே எழுந்து உங்களது செயல்களைச் சரியாகச் செய்தாலே நீங்கள் ஒழுக்கமுடையவர்களாக இருக்கலாம். அதனால் முன்னேற்றத்தையும் அடையலாம். அதைவிட்டு 4 அல்லது 5 மணிக்கு எழுவேன் என்று உங்களை நீங்களே சிரமப்படுத்திக்கொள்ளாமல் இருங்கள்.

3.நாட்களைத் திட்டமிட்டுச் செய்கிறேன் என்று . அந்தத் திட்டத்தை ஆரம்பித்த அடுத்த நாளே கைவிட்டுவிடுவது. முதலில் திட்டத்தை உருவாக்குவதற்கு உங்கள் மனதில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள். நான் இன்று நினைத்தவற்றில் ஏதேனும் ஒன்றையாவது செய்து முடிப்பேன் என்று. அப்படியே உங்கள் செயலை நாளாக நாளாக அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள். பி்ன்னர் திட்டம் வகுத்து அதை நடைமுறைப்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Motivation article

4. 888 விதி செயல்படுத்திப் பாருங்கள். அதாவது 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் உங்கள் இலக்குக்கான உழைப்பு. 3மணி நேரம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடுதல், 3 மணி நேரம் ஆரோக்கியம் மற்றும் உங்கள் பொழுதுபோக்கிற்கு, இரண்டு மணி நேரம் நீங்கள் உங்களுடன் செலவிடுவதற்கு மற்ற பொதுக் காரியங்களில் ஈடுபடுவதற்கு என உங்கள் நாளை இந்த 8 விதியின் மூலம் பிரித்தால் நீங்கள் நினைத்தது போல் ஒரு செயலைத் தொடர்ந்து உங்களால் கடைப்பிடிக்க முடியும் இதனால் உங்கள் இலக்கை எளிமையாக அடையலாம்.

மேற்கூறியபடி, நீங்கள் விரும்பிய செயலைச் செய்ய எளிமையான நெறிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடித்தால். நிச்சயம் நீங்களும் ஒழுக்கமுடையவராக மாறலாம். அது மட்டுமின்றி உங்கள் இலக்கையும் எளிமையாக அடையலாம். நீங்கள் நினைத்ததுபோல் எப்பொழுதும் சுதந்திரமாக இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com